கன்னியாகுமரி தொகுதியில் யார் போட்டி? -வசந்தகுமார் மகன் விளக்கம்!

Share this News:

சென்னை (04 செப் 2020): காங்கிரஸ் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி செய்ல்படவுள்ளதாக மறைந்த காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமாி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாா் சில தினங்களுக்கு முன் கரோனா தாக்குதலால் உயிாிழந்தாா். சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் அவா் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் கன்னியாகுமரியில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “அப்பாவின் இழப்பு எங்களையும் தாண்டி காங்கிரசுக்கும் போிழப்பாக உள்ளதை அதை நோில் பாா்க்கும் போதுதான் உணர முடிகிறது. அப்பாவின் அனுதாபிகள் நான் அரசியலில் ஈடுபட வேண்டுமென்று விரும்புகிறாா்கள். இடைத்தோ்தல் நடக்கும் போது போட்டியிடுவீா்களா என்றும் கேட்கிறாா்கள்.

அப்பா அடிக்கடி சொல்வது போல் முதலில் தொழிலை பாா்த்தால்தான் மற்ற வேலைகளை செய்ய முடியும் என்று. அதனால்தான் அப்பா விட்டுசென்ற தொழிலில் முதலில் கவனத்தை செலுத்த வேண்டும்.

அதோடு குடும்பத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. அப்பா மறைவுக்கு பிறகு அரசியலில் அப்பாவுக்கு பதிலாகவோ அல்லது அவா் இடத்தை நிரப்பவோ எங்க குடும்பத்தில் யாரும் முடிவு எடுக்கவில்லை. இதனால் உடனடியாக தற்போதைய தோ்தலில் போட்டியிடும் மனநிலையில் இல்லை. மேலும் நான் இப்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருப்பதால் கட்சி எடுக்கிற முடிவு படி நானும் எனது குடும்பமும் செயல்படுவோம்” என்றாா்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *