மதுரை (09 செப் 2020): மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் அதிமுகவில் மீண்டும் எடப்பாடி, ஓபிஎஸ் யுத்தம் தொடங்கியுள்ளது.
மதுரையில் ராஜேந்திர பாலாஜியின் படத்தோடு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் “மக்களின் முதல்வர் எடப்பாடியாரை குறை சொன்னால் நாக்கு அழுகிவிடும்”- எடப்பாடியாரை புறம் பேசுபவர்கள் இதைப் படித்த பிறகாவது திருந்தட்டும் என்று மதுரை நகரெங்கும் போஸ்டர் ஒட்டப்பட்டது.
இதற்கு எதிராக ஓ.பி.எஸ் தரப்பினர் “அரசியலில் முதிர்ச்சி” “அதிகாரத்தில் அடக்கம்” “என்றென்றும் தமிழர் தலைவர் ஓபிஎஸ் வழியில்” என்று பசும்பொன் தேவர் மற்றும் ஓ.பி.எஸ் படத்துடன் எடப்பாடியார் போஸ்டருக்கு பதிலடியாக போஸ்டர்கள் ஒட்டபட்டுள்ளது அதிமுக கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது.