சசிகலா வருகை – அதிமுகவில் நடப்பது என்ன?

Share this News:

சென்னை (31 மே 2021): சசிகலா மீண்டும் அதிமுகவை கையில் எடுக்கப்போகிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ள நிலையில்,திமுக தொண்டர்களை திசை திருப்பி தொண்டர்களை குழப்ப முயல்கிறார் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே பி முனுசாமி தெரிவித்துள்ளார்.

கட்சியை சரி செய்ய விரைவில் வருகிறேன். கவலைப்படாமல் இருங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் என சசிகலா கூறியுள்ளார். அது போல் கட்சியில் அவர்கள் சண்டையிட்டு கொள்வது வேதனையை அளிப்பதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார்.

இதிலிருந்து கட்சியில் இரு தலைமைக்கு இடையே ஏற்பட்டுள்ள மனக்கசப்பை பயன்படுத்தி சசிகலா அதிமுகவில் நுழைய முற்படுகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் இத்தனை நாட்கள் இல்லாமல் திடீரென சசிகலா பேசிய ஆடியோவை லீக் செய்வது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.

இந்நிலையில் அதிமுக தொண்டர்களை திசை திருப்பி தொண்டர்களை குழப்ப முயல்கிறார் சசிகலா என்றும் அவரது எண்ணம் பலிக்காது என்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே பி முனுசாமி தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply