நாகூர் (17 மார்ச் 2021): நாகூர் அருகே சுயேச்சை வேட்பாளரும் பிரபல தாத்தாவுமான எழிலரசியை போலீசார் கைது செய்துள்ளனர்.
காரைக்காலை அடுத்த திருமலைராயன்பட்டினத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்… இவர் ஒரு பிசினஸ்மேன்.. இவரது 2வது மனைவிதான் எழிலரசி.. 45 வயதாகிறது.. இவர் ஒரு தாதா. இவர் மீது . முன்னாள் அமைச்சர் சிவக்குமார், ராதாகிருஷ்ணனின் முதல் மனைவி வினோதா, திருமலைராயன்பட்டினத்தை சேர்ந்த அய்யப்பன் ஆகியோரை கூலிப்படையை வைத்து கொலை செய்தல் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.
இதனை அடுத்து இவர் தேடப்படும் குற்றவாளியாக இருந்துவந்தார். இப்படிப்பட்ட சூழலில்தான், திருமலைராயன்பட்டினத்துக்கு எழிலரசி காரில் வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது..
அந்த தகவலின் அடிப்படையில், எஸ்பி வீரவல்லபன் உத்தரவின் பேரில், போலீசார் விரைந்து சென்று நாகூர் அருகே வாஞ்சூர் என்ற இடத்தில் வழிமறித்து, எழிலரசியை கைது செய்தனர்.. சுயேச்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்துவிட்டநிலையில், தொகுதியில் அவரது ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலையில், தாதா எழிலரசி கைதானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.