அறந்தாங்கி (18 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம் பெண்கள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை எதிர்த்து அறந்தங்கி மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அறந்தாங்கியில் மாதர் சம்மேளனம் சார்பில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்க ஒன்றிய தலைவர் பாண்டியம்மாள் சிறப்புரை ஆற்றினார். மேலும் பல நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.