பாலியல் வழக்கில் தொடர்ந்து சிக்கும் பாஜக பிரபலங்கள் !

Share this News:

லக்னோ (20 பிப் 2020): பாலியல் வழக்கில் இன்னொரு பாஜக பிரபலம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்திர பிரதேசம் படேஹி காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அதில் “என் கணவர் கடந்த 2007 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார். என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாஜக எம்.எல்.ஏ ரவீந்திரநாத் திரிபாதியின் மருமகன் என்னை பல வருடங்கள் ஏமாற்றி வந்தார். மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு உ.பி தேர்தலின்போது என்னை ஒரு ஹோட்டலில் அடைத்து வைத்து எம்.எல்.ஏ ரவீந்திரநாத் திரிபாதி உள்ளிட்ட எம்.எல்.ஏ குடும்பத்தினர் ஆறு பேர் என்னை வன்புணர்வு செய்தனர். அதுமட்டுமலாமல் நான் கர்ப்பம் அடைந்திருந்தேன். அந்த குடும்பத்தினர் என்னை கட்டாயப்படுத்தி கர்ப்பத்தை கலைத்தனர்” என்று அந்த புகாரில் கூறியிருந்தார்.

இதனை அடுத்து படேஹி காவல் நிலையத்தில் பாஜக எம்.எல்.ஏ ரவீந்திரநாத் திரிபாதி உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று காவல்துறை அதிகாரி ரவீந்திர வர்மா தெரிவித்துள்ளார்.

உத்திர பிரதேசத்தில் பாலியல் வழக்குகள் அதிகரித்திருப்பதும், குறிப்பாக பாஜகவினரே இதில் சிக்குவதும் குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *