ஜெய்ப்பூர் (20 பிப் 2020): ராஜஸ்தானில் திருடியதாக கூறி தலித் இளைஞர்கள் இருவரின் மர்ம உறுப்பில் பெட்ரோல் ஊற்றி, ஸ்குரூ டிரைவரை செலுத்தி, சித்ரவதை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் நகவ்ர் மாவட்டத்தில் இரண்டு தலித் இளைஞர்கள், இருசக்கர வாகன ஷோரூமில் பணம் திருடியதாக ஷோரூம் ஊழியர்கள் குற்றம் சாட்டினர். மேலும் அவர்கள் இருவரையும் கட்டி வைத்து மர்ம உருப்பில் பெட்ரோல் ஊற்றி, ஸ்க்ரூ டிரைவரை செலுத்தி சித்ரவதை படுத்தியுள்ளனர். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இச்சம்பவத்திற்கு பிம் ஆர்மி தலைவர் சந்திரசேகர ராவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இது தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றதாகவும் கூறப்படுகிறது.