ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா முக்கிய அறிவிப்பு!

Share this News:

புதுடெல்லி (11 மார்ச் 2020): ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என வங்கி நிர்வாக அறிவித்துள்ளது.

எஸ்.பி.ஐ தலைவர் ரஜ்னீஷ் குமார் இத்தகவலை வெளியிட்ட அறிவிப்பில், பாரத ஸ்டேட் வங்கியில் வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் ஊரகப்பகுதி எனில் ரூ.1,000 மற்றும் நகர்ப்பகுதிகளில் ரூ.2,000, பெரு நகரங்களில் ரூ.3,000 இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது.

இந்த நிலையில், எஸ்.பி.ஐ. வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் வாடிக்கையாளர்கள் பூஜ்யம் இருப்புத்தொகையுடன் உபயோகிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

44.51 கோடி வாடிக்கையாளர்கள் இந்த அறிவிப்பின் மூலமாக பயன்பெறுவார்கள் என்றும் ரஜ்னீஷ் குமார் கூறினார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *