நியூயார்க் (11 மார்ச் 2020): அமெரிக்கா முழுவதுமாக கரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் கரோனா கொரோனா வைரஸ் (கோவிட் -19)தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஐ எட்டியுள்ளதாக வாஷிங்டன் நல்வாழ்வுத் துறை உறுதிப்படுத்தியுள்ளனர், இதையடுத்து அமெரிக்கா முழுவதுமாக கரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஜனவரி 10 ஆம் தேதி முதன்முதலாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் கண்டறிப்பட்டார். அதிலிருந்து இதுவரை வாஷிங்டன் மாகாணத்தில் சுமார் 267 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நல்வாழ்வுத் துறை செவ்வாய்க்கிழமை அறிவிப்பொன்றில் தெரிவித்தது.
அமெரிக்காவில் இப்போது 900-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.