கொரோனா பரவல் முடிவுக்கு வருமா? – நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி விளக்கம்!

Share this News:

நியூயார்க் (04 ஏப் 2020): கொரோனா வைரஸ் பரவல் விரைவில் முற்றிலும் தடுக்கப்பட்டுவிடும் என்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உயிரியற்பியலாளரும் நோபல் பரிசு பெற்றவருமான மைக்கேல் லெவிட் கணித்துள்ளார்.

வேதியியலுக்கான 2013 நோபல் பரிசை வென்ற லெவிட், சீனாவில் தொற்றுநோய் பற்றி முன்னரே கணித்து கூறினார். மேலும் பல சுகாதார வல்லுநர்கள் கணிப்பதற்கு முன்பே அதன் பேரழிவு தன்மை குறித்தும் விளக்கி இருந்தார்.

தி லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறும் போது “பீதியைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். சமூக விலகலை கடைபிடிப்பது மற்றும் காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி போடுவது இரண்டுமே பரவலுக்கு எதிரான போராட்டத்திற்கு முக்கியமானவை என்று லெவிட் கூறினார்.

மேலும், தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும் எனவும் கூறியுள்ளார். சீனாவில் கரோனா வைரஸ் பரவிய போது, சீனா குறித்து நிபுணர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டிருந்து போதிலும், மைக்கேல் லெவிட் சில உண்மையான கணிப்புகளை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அடுத்த வாரத்தில் இறப்புகளின் எண்ணிக்கை இன்னும் குறைந்து விடும் என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக சீனாவில் 80,000 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்படுவார்கள் மற்றும் 3,250 உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று மைக்கேல் லெவிட் மதிப்பிட்டு கூறியிருந்தார். அவரின் கூற்றின் படியே, சீனாவில் 3277 உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன், 81,171 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் தற்போது விஞ்ஞானி மைக்கேல் லெவிட் வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் கவனம் பெற்றுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *