சாலையில் கேட்பாடற்று கிடந்த பணம் – எடுக்க அச்சப்பட்டு போலீசுக்கு தகவல்!

Share this News:

சென்னை (26 ஏப் 2020): சாலையில் கேட்பாடற்று கிடந்த ரூபாய் நோட்டுகள் கொரோனாவை பரப்ப வீசப்பட்டதாக வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கொருக்குப்பேட்டை சாலையில், நான்கு 100 ரூபாய் நோட்டுகள் மற்றும் ஒரு 50 ரூபாய் நோட்டும் கிடந்தது. இந்த ரூபாய் நோட்டுகளை புகைப்படம் எடுத்து, இது கொரோனா தொற்று பரப்புவதற்காக அப்பகுதியில் வீசப்பட்டுள்ளது என சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவியது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆர்.கே நகர் போலீசார் ரூபாய் நோட்டுகள் இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்று மாநகராட்சி ஊழியர்களின் உதவியுடன் அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அந்த ரூபாய் நோட்டுகளை மீட்டனர்.

மேலும் அவசியமில்லாமல் வதந்தி பரப்பிய நபர்களை கண்டுபிடிப்பது குறித்து காவல் துறையினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *