வாஷிங்டன் (26 ஏப் 2020): அமெரிக்காவில் தொழுகைக்கான அழைப்பு (பாங்கு) பல இடங்களில் ஒலிக்கிறது.
அமெரிக்காவில் ஒலிப்பெருக்கி மூலம் பாங்கு சொல்ல பல இடங்களில் கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் இவ்வருட புனித ரமலான் மாதத்திற்காக அக் கட்டுப்பாடுகள் நீக்கப் பட்டுள்ளன.
அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் நகரின் மேயர் ஜேக்கப் பிரே, நகரின் அனைத்து பகுதிகளிலும் ரமலான் மாதத்தின் அனைத்து தினங்களிலும் ஐந்து வேளைக்கும் ஒலிப் பெருக்கி மூலம் பாங்கு அழைப்புக்கு அனுமதி அளித்துள்ளார்.
அமெரிக்கா கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க இஸ்லாமிய கவுன்சில் ஒலிப்பெருக்கியில் பாங்கு சொல்ல அனுமதி கோரியிருந்தது. இதனை ஏற்ற மேயர் ஜேக்கப் பிரே ரமலான் மாதம் முழுவதும் பாங்கு சொல்ல அனுமதி அளித்துள்ளார்.
பள்ளிவாசல்கள் சென்று தொழுவதற்கு வாய்ப்பற்ற சூழலில், ஒலிப்பெருக்கி மூலம் பாங்கு சத்தம் கேட்கத் துவங்கியதால் அமெரிக்கவாழ் முஸ்லிம்கள் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளனர்.