இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 49 பேர் பலி!

Share this News:

புதுடெல்லி (26 ஏப் 2020): இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 49 பேர் பலியாகியுள்ள்னார், மேலும் 1990 பேருக்கு, புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 826 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 49 பேர் பலியாகியுள்ளனர், ஆயிரத்து 990 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 496 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்ட்ராவில் 7 ஆயிரத்து 628 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 323 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 3 ஆயிரத்து 71 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 133 பேர் பலியாகியுள்ளனர்.

டெல்லியில் 54 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 625 ஆக உள்ளது. ராஜஸ்தானில் 2 ஆயிரத்து 141 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் ஆயிரத்து 945 பேருக்கும், தமிழகத்தில் ஆயிரத்து 821 பேருக்கும், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 ஆயிரத்து 940 பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்


Share this News:

Leave a Reply