திருச்சி மசூதி இடிப்பிற்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம்!

Share this News:

சென்னை (13 அக் 2020): திருச்சி திருச்சி திருவானைகோவில் மசூதி இடிக்கப்பட்டதற்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் ஶ்ரீரங்கம் பாலத்தின் கீழ்ப் பகுதியில் திருவானைகோவிலில் அமைந்துள்ள ஹஸ்ரத் சையத் மஸ்தான் அவுலியா தர்கா பள்ளிவாசலின் முன்பகுதியை இன்று காலை நெடுஞ்சாலைத் துறையினர் இடித்துள்ள அராஜகத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பள்ளிவாசல் தரப்பில் பள்ளிவாசலை இடிக்கக் கூடாது என்று உரிய நீதிமன்றதடை ஆணைகளைப் பெற்றிருந்த நிலையிலும் வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் காவல்துறையினரின் அனுமதியுடன் இடிக்கப்பட்டுள்ளது.. பள்ளிவாசல் முன் பகுதியை இடித்ததுடன் பள்ளிவாசல் நிர்வாகிகளை காவல்துறையினர் தாக்கியுள்ளனர். இதே அளவில் பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள தனியார் கட்டடங்களை தீண்டாத அரசு அதிகாரிகள் பள்ளிவாசல் முன்பகுதியை மட்டும் இடித்து தமது பாரபட்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு உடனடியாக இடிக்கப்பட்ட பள்ளிவாசல் பகுதியை மீண்டும் கட்டி தருவதற்கும் அத்துமீறி பள்ளிவாசலை இடித்த அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இன்று காலை திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் அப்துல் மாலிக் இது குறித்து தகவல் அளித்தார். தமுமுக பொருளாளர் பொறியாளர் ஷபியுல்லாஹ் கானின் அறிவறுத்தலில் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் உதுமான் அலி தலைமையில் தமுமுக மற்றும் ம ம க நிர்வாகிகள் உடனடியாக களத்திற்கு வந்து போராட்டத்த்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது,


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *