பாஜக தலைவருக்கு புடவை உடுத்தி வளையல் அணிவித்து சித்தரவதை செய்த சிவசேனாவினர்!

Share this News:

சோலாப்பூர் (08 பிப் 2021): மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை விமர்சனம் செய்த பாஜக தலைவர் மீது தாக்குதல் நடத்திய சிவசேனாவினர் அவருக்கு புடவை உடுத்தி வளையல் அணிவித்து சித்ரவதை செய்துள்ளனர்.

கடந்த காலங்களில் உத்தவ் தாக்கரேவை விமர்சிப்பவர்களை சிவசேனாவினர் தாக்கியுள்ளனர். முன்னாள் கடற்படை அதிகாரியான மதன் சர்மா, தாக்கரேவை கேலி செய்யும் கார்ட்டூனைப் பகிர்ந்ததற்காக கடந்த ஆண்டு சிவசேனாவினரால் தாக்கப்பட்டார்.

இந்நிலையில் உத்தவ் தாக்கரேயை விமர்சனம் செய்த பாஜக தலைவர் ஷிரிஷ் கட்டேகரை முற்றுகையிட்ட சிவசேனாவினர் அவரை தாக்கியத்துடன் அவருக்கு புடவை உடுத்தி, வளையல் அணிவித்து
சித்தரவதை செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்த சோலாப்பூர் போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்துள்ளனர்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *