துபாய் (08 பிப் 2021): சவூதி செல்வதற்காக துபாயில் தனிமைப்படுத்தலில் இருக்கும் இந்தியர்களுக்கு உதவ மத்திய அரசு மூலமாக கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது
கோவிட் தொற்றுநோயால் இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு நேரடி விமானம் இல்லாததால் துபாய் வழியாக பலர் சவுதிக்கு சென்றனர். ஆனால் சவூதி அரேபிய மீண்டும் 20 நாடுகளுக்கு விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில் சவூதி அரேபியா விதித்த விமானத் தடை காரணமாக 14 நாட்கள் துபாயில் தனிமைப்படுத்தலுக்காகக் கழித்த இந்தியர்கள் சிக்கலில் சிக்கியுள்ளனர். இதில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
அவர்களுக்கு உதவ வேண்டி கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். துபாயிலிருந்து சவுதிக்கு செல்ல பயண அனுமதி தொடர்பாக ஏதேனும் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள்,விசிட் விசாக்களை நீட்டித்தல் மற்றும் அவர்கள் தாயகம் திரும்புவதற்கான வசதிகளை வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை கேரள அரசு கோரியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதருக்கு கடிதம் மூலம் இவ்விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.