முஸ்லிம் மாணவனை தீவிரவாதிபோல் இருப்பதாக கூறிய ஆசிரியர் பணியிடை நீக்கம்!

Share this News:

பெங்களூரு (28 நவ 2022): கர்நாடக மாநிலத்தில் மாணவனை தீவிரவாதிபோல் இருப்பதாக கூறிய கல்லூரி பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கரநடக மாநிலம் உடுப்பியில் உள்ள மணிபால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் உள்ள ஒரு பேராசிரியர் வகுப்பில் ஒரு மாணவனின் பெயரைக் கேட்டார். முஸ்லீம் பெயரை கூறிய அந்த மாணவனைப் பார்த்து , “ஓ, நீங்கள் அஜ்மல் கசாப் போல இருக்கிறீர்கள்” என்று கூறினார்.

மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அஜ்மல் கசாப்பை குறிப்பிட்டே அவ்வாறு ஆசிரியர் தெரிவித்துள்ளார். மாணவனுக்கும் ஆசிரியருக்கும் இடையே நடைபெறும் உரையாடல் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அந்த வீடியோவில் ஆசிரியருடன் பேசும் மாணவன், இந்த நாட்டில் ஒரு முஸ்லிமாக இருப்பதால், நான் தினமும் இதை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. என் மதத்தைப் பற்றி இவ்வளவு கீழ்த்தரமாக பேச உங்களுக்கு எப்படி மனம் வந்தது?

அப்போது பேராசிரியர் மாணவனை சமாதானம் செய்ய முயன்றார், “நீ என் மகன் மாதிரி” என்றார். அதற்கு உங்கள் மகனிடம் அப்படி பேசுவீர்களா? தீவிரவாதி என்று சொல்வீர்களா என்று அந்த மாணவர் கேட்டார். பேராசிரியர் இல்லை என்று பதிலளித்தார். “இவ்வளவு பேர் முன்னிலையில் நீங்கள் என்னை எப்படி இவ்வாறு அழைக்க முடியும்? மன்னிப்பு உங்கள் மனநிலையை மாற்றாது,” என்று மாணவர் கூறினார். வீடியோவில் இவ்வாறு உள்ளது,

இந்நிலையில் அந்த ஆசிரியரை மணிபால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இடைநீக்கம் செய்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து அந்த கல்லூரி நிர்வாகம் ஏற்கனவே விசாரணையைத் தொடங்கியுள்ளது. விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *