கத்தார் உலகக்கோப்பை தொடக்க விழா நட்சத்திரம் கானிம் அல் முஃப்தா இந்தியா வர அழைப்பு!

Share this News:

தோஹா (28 நவ 2022): கத்தார் உலகக்கோப்பை தொடக்க விழா நட்சத்திரம் கானிம் அல் முஃப்தாவை இந்தியாவிற்கு வருமாறு அழைத்துள்ளார், கேரள மாநிலத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி அசிம் வெலிமன்னா.

அசிம் வெலிமன்னா உலகக்கோப்பை போட்டியை காண்பதற்காக கத்தார் வந்துள்ளார். அவரை கானிம் அல் முஃப்தா மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டுக்கு அழைத்து விருந்தளித்தனர்.

இந்நிலையில் கானிம் அல் முஃப்தாவை இந்தியாவிற்கு அழைத்துள்ளார் அசிம் வெலிமன்னா. மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்கான போராட்டங்களில் குறிப்பிடத் தக்கவர் ஆசிம் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply