படுக்கைக்கு அழைத்த கவுன்சிலர் – பிரபல நடிகை பரபரப்பு பேட்டி!

Share this News:

புனே (23 டிச 2022): வீட்டு வாடகைக்காக கவுன்சிலர் ஒருவர் படுக்கைக்கு அழைத்ததாக பிரபல மராத்தி நடிகை தேஜஸ்வினி பண்டிட் தெரிவித்துள்ளார்.

மராத்தி படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் தேஜஸ்வினி பண்டிட்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நடிகை தேஜஸ்வினி பண்டிட் பேட்டி கொடுத்தார். அப்போது அவர் அந்த பேட்டியில் அவர் கூறியதாவது –

2009 – 10ம் ஆண்டு நடந்தது. அப்போது என் 2 படங்கள் தான் ரிலீஸாயின. நான் புனேவில் இருக்கும் சின்ஹாகாத் சாலையில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தேன். அந்த அபார்ட்மென்ட் ஒரு கவுன்சிலருக்கு சொந்தமானது.

என்னுடைய வாடகை பணத்தை எடுத்துக் கொண்டு அவரின் அலுவலகத்திற்கு செல்வேன். அவரோ என்னை படுக்கைக்கு அழைத்து ஆஃபர் கொடுத்தார்.

அப்போது, கடுப்பான நான் அவர் மேஜையில் ஒரு கிளாஸில் இருந்த தண்ணீரை எடுத்து அவரின் முகத்தில் ஊற்றிவிட்டு கிளம்பி வந்துவிட்டேன். சினிமா என் தொழில். அந்த கசப்பான அனுபவம் மூலம் நான் பாடம் கற்றுக்கொண்டேன்.

தற்போது இந்த பேட்டி தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள், வாடகைக்கு பதில் படுக்கைக்கு வா என்று அழைத்த அந்த கவுன்சிலர் யார் என்று கூறுங்கள். இது போன்ற ஆண்களின் பெயரை தெரிவித்தால் தான் மற்றவர்களுக்கு பயம் வரும் என்று கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *