உலகை உலுக்கிய சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ் சிறையிலிருந்து விடுதலை!

Share this News:

காத்மன்டு (23 டிச 2022): கொலை, கொள்ளை என உலகை உலுக்கிய சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ், இந்தியாவில் தண்டனைக் காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்ட பின், நேபாளத்தில் உள்ள கொலை வழக்குகளுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அமெரிக்க சுற்றுலாப் பயணி கோனி ஜோ ப்ரோன்சிச்சை கொலை செய்த வழக்கில் நேபாள நீதிமன்றம் 1975-ல் சோப்ராஜுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.

10 ஆண்டுக்குப் பிறகு ப்ரோன்சிச்சின் கனடா நண்பரை கொன்ற வழக்கிலும் சோப்ராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.

இந்த வழக்குகளில் தண்டனை பெற்ற சோப்ராஜ், 2008-ம் ஆண்டு சிறையில் வைத்து தன்னைவிட 44 வயது இளைய பெண்ணான நிஹிதா பிஸ்வாஸை திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறையில் இருக்கும்போதே அவருக்கு இருதய பிரச்சினை ஏற்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது.

தற்போது அவருக்கு 78 வயதாகிறது. இதற்கிடையே, வட அமெரிக்க சுற்றுலா பயணிகள் இருவரை கொலை செய்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சார்லஸ் சோப்ராஜை விடுதலை செய்யும்படி நேபாள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு சிறையில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இந்நிலையில், நேபாள சிறையில் இருந்து சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ் விடுதலை செய்யப்பட்டார்.


Share this News:

Leave a Reply