பணம் வந்த கதை பகுதி 1 – சந்தையில் விளைந்த சண்டை!
இப்போது நான் சொல்லப் போவது முழுக்க முழுக்க கற்பனையும் அல்ல. முழுக்க முழுக்க உண்மையும் அல்ல. இதில் எத்தனை சதவீதம் உண்மை, எத்தனை சதவீதம் கற்பனை என்பதையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. இதில் வரும் கதாபாத்திரங்களையும் சம்பவங்களையும் நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம். இல்லை என்று மறுப்பதற்கில்லை. இருந்தாலும் ‘கதை’ என்ற சொல்லுக்கு ஒரு கவர்ச்சி உண்டு என்பதால் நானும் இதை ‘கதை’ என்றே சொல்லப் போகிறேன். நீங்களும் அவ்வப்போது ‘ம்..’ போட மறந்து விடாதீர்கள். இந்தக் கதையின்…
