மூடப்படும் தமிழ் பள்ளி – மோடியின் மாநிலத்தில் நசுக்கப்படும் தமிழர்கள்!

அஹமதாபாத் (23 செப் 2020): குஜராத்தில் 81 வருட பாரம்பரிய தமிழ் பள்ளி மூடப்படுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குஜராத் அஹமதாபாத்தில் உள்ள தமிழ் பள்ளியை மூட குஜராத் அரசு உத்தரவிட்டு கெடு விதித்துள்ளது. பள்ளியை மூட வேண்டாம் என்று மாவட்ட கல்வி அலுவலர் வரை சந்தித்துவிட்டனர் குஜராத் வாழ் தமிழ் மக்கள். ஆனால் அரசு செவி சாய்க்கவில்லை,. இந்த பள்ளியில் படித்த ஏராளமானோர் பல்வேறு அரசுத்துறையிலும் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் தற்போது மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக…

மேலும்...

நீக்கப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இரவு முழுவதும் தர்ணா!

புதுடெல்லி (22 செப் 2020):மாநிலங்களவையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட எம்பிக்கள் இரவு முழுவதும் தர்ணாவில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற மாநிலங்களவையில் வேளாண் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட போது கடும் அமளி ஏற்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினார்கள். திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சிகளின் உறுப்பினர்கள் துணைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையில் விதிமுறைகளை மீறி நடந்து கொண்ட உறுப்பினர்கள் 8 பேரை ஒருவாரம் சஸ்பெண்ட்…

மேலும்...

விவசாய சட்டத்தின் பின்னுள்ள ஆபத்து!

சென்னை (21 செப் 2020): வேளாண் மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இதனால் என்னென்ன பாதிப்பு என்பது குறித்து சமூக வலைதளங்களில் பெரிய விவாதமே நடைபெறுகிறது. இந்நிலையில் எழுத்தாளர் அபிலாஷ் இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து எழுதியுள்ளார். “விவசாயிகள் மசோதா – கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கப்படுகிறோம் நாம். முதலில் மாநிலங்கள் வரிவசூலிக்கும் உரிமையைப் பறித்தார்கள். அடுத்து, கல்வி மீதான உரிமையைப் பிடுங்கினார்கள். இப்போது விவசாயிகள் மசோதா வழி அத்தியாவசியப் பொருட்களின் விலையை மாநில அரசு நிர்ணயிக்கும் உரிமையும்…

மேலும்...

எட்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் திடீர் இடை நீக்கம்!

புதுடெல்லி (21 செப் 2020): வேளாண் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்தபோது எதிர்ப்பு தெரிவித்த 8 அவை உறுப்பினர்களை மீதமுள்ள அமர்வுகளில் பங்கேற்க தடை விதித்து அவையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கான உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் மசோதா, விவசாயிகளுக்கான விலை உறுதியளிப்பு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா, அத்தியாவசிய பொருட்கள் சட்டத் திருத்த மசோதா ஆகியவை மக்களவையில் கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் மூன்று மசோதாக்களும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. வேளாண் துறை…

மேலும்...

கேரளாவில் பரபரப்பு – அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது!

திருவனந்தபுரம் (20 செப் 2020): கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் தேசிய புலனாய்வு முகமை (எஐஏ)நடத்திய தேடுதல் வேட்டையில் ஒன்பது அல் கொய்தா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக் கிழமை அதிகாலை, நடத்திய தேடுதல் வேட்டையில் மேற்கு வங்கத்தில் ஆறு பேரும், கேரளாவில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் என்/ஐ.ஏ. விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மேலும்...

பொதுமக்களை நசுக்கும் மத்திய அரசின் அடுத்த அதிர்ச்சித் தகவல்!

புதுடெல்லி (18 செப் 2020): பயணிகள் ரெயில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ரெயில்வே வாரிய தலைவர் யாதவ் பிரசாத் கூறியதாவது:- முக்கிய ரெயில் நிலையங்களை பயணிகள் பயன்படுத்த ஒரு சிறிய கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிக்கை வெளியிடப்பட உள்ளது. ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இது உதவும் என்று நம்புகிறோம். ரெயில் நிலையங்களின் மறு வளர்ச்சிக்காக இந்த கட்டணம் வசூலிக்கப்படும். நிலையம்…

மேலும்...

தங்கக் கடத்தல் வழக்கில் அமைச்சர் ஜலீலிடம் என்.ஐ.ஏ 8 மணிநேரம் விசாரணை!

திருவனந்தபுரம் (18 செப் 2020): கேரள தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீலிடம் என்.ஐ.ஏ 8 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர். கேரள தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஸ்வப்னா சுரேஷ், முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் மிகவும் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக தகவல் வெளியானதால் ஆளுங்கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள்…

மேலும்...

இனி கை கடிகாரத்தின் மூலம் ஷாப்பிங் செய்யலாம்- டெபிட் கார்டு தேவையில்லை!

புதுடெல்லி (17 செப் 2020): ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவும், டைட்டான் கைகடிகார நிறுவனமும் இணைந்து ஷாப்பிங் செய்ய புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இனி நீங்கள் ஷாப்பிங் செய்த பிறகு தொகை செலுத்த எந்த டெபிட் கார்டும் அல்லது எந்த மொபைல் ஃபோன் பயன்படுத்த தேவையில்லை. இந்த வேலை இனி உங்கள் மணிக்கட்டு கடிகாரத்துடன் (Wrist Watch) செய்யப்படும். வாட்ச் நிறுவனமான Titan முதல் முறையாக இந்தியாவில் தொடர்பு இல்லாத (Contactless Payment) கட்டணத்தை…

மேலும்...

50 ஆண்டுகள் தோல்வியையே சந்திக்காமல் பொன்விழா கொண்டாடும் முன்னாள் முதல்வர்!

திருவனந்தபுரம் (17 செப் 2020): கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, தொடர்ந்து 50 ஆண்டுகள் சட்டசபை உறுப்பினராக இருந்து பொன்விழா கொண்டாடுகிறார். கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளியில் இருந்து 1970 லிருந்து இதுவரை தோல்வியை சந்திக்காமல் 50 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் இதுவரை 11 தேர்தல்களை சந்தித்துள்ளார். இந்திரா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் கூட தோல்வியை சந்தித்திருந்தபோதும் உம்மண் சாண்டி ஒரே தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று சாதித்துள்ளார். முதல்வராக இருந்த…

மேலும்...
Advani

பாபர் மசூதி இடிப்பு வழக்கு – செப்டம்பர் 30 ல் தீர்ப்பு!

புதுடெல்லி (16 செப் 2020): பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்டம்பர் 30-ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்கள் இடித்துத் தள்ளினர். இந்த மசூதி இடிப்புக்கு சதி செய்ததாக பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, கல்யாண் சிங், வினய் கட்டியார், சாக்‌ஷி மகராஜ் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவானது….

மேலும்...