கோவில் தேர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

கோதாவரி (06 செப் 2020): ஆந்திர மாநிலத்தில் கோவில் தேர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அந்தர்வேதியில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான தேர், கோவில் வளாகத்தில் உள்ள கூடாரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று நள்ளிரவு திடீரென இந்த தேர் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்….

மேலும்...

ராஜ்நாத் சிங் மாஸ்கோவிலிருந்து தெஹ்ரான் பயணம்!

மாஸ்கோ (05 செப் 2020): மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாஸ்கோவிலிருந்து ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு புறப்பட்டுச் சென்றார். இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை அமச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியா தரப்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்றார். இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய விவகாரங்கள் குறித்த ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் சீன பாதுகாப்புத்துறை அமைச்சரை…

மேலும்...

காதலன் மீது காதலி ஆசிட் வீச்சு – இது வேறமாதிரி!

கர்னூல் (15 செப் 2020): ஆந்திராவில் காதலன் மீது காதலி ஆசிட் வீசிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்னூல் மாவட்டம் நந்தியால் மண்டலத்தில் உள்ள பெட்டா கோட்டலா கிராமத்தில் நேற்று 20 வயது பெண் ஒருவர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரை காதலித்து வந்துள்ளனர். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்வதாக காதலன் உறுதியளித்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு, காதலனின் பெற்றோர் அவருக்காக ஒரு பெண்ணை ஏற்பாடு செய்ததாகவும், அவர் அவளை திருமணம் செய்து…

மேலும்...

தொடர் வெறுப்புப் பிரச்சாரம் – பாஜக எம்.எல்.ஏவின் கணக்கை முடக்கியது ஃபேஸ்புக்!

புதுடெல்லி (03 செப் 2020): பல நெருக்கடிகளுக்கு மத்தியில் பாஜக எம்.எல்.ஏ ராஜாசிங்கின் ஃபேஸ்புக் கணக்கை முடக்கியது ஃபேஸ்புக் நிறுவனம். அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னல் எழுதி உள்ள ஆய்வு கட்டுரையில், பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் பாஜகவினர் செய்யும் வெறுப்பு பேச்சுக்களை நீக்குவது இல்லை. பாஜகவினர் செய்யும் போஸ்ட்களை கண்மூடித்தனமாக பேஸ்புக் ஆதரிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.. அதேபோல பாஜகவின் தலைவர்கள் செய்யும் வெறுப்பு பேச்சுகளுக்கு எதிராக பேஸ்புக் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பலதரப்பிலிருந்தும் புகார் எழுந்து வருகிறது…

மேலும்...
PUB G

PUBG-க்கு தடை போட்டது நடுவண் அரசு..!

தில்லி (02செப். 2020):சில மாதங்களுக்கு முன்பாக லடாக் எல்லைப் பகுதியில் நடைபெற்ற இந்திய, சீன வீரர்களுக்கு இடையேயான மோதலுக்குப் பிறகு, சீன நிறுவனங்களின் டிக்டாக், யூசி ப்ரவுசர், ஹலோ, ஷேரிட் உள்ளிட்ட 59 செயலிகளைத் தடை செய்வதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. சீனாவுக்கான பொருளாதார ரீதியிலான பதிலடியாக இதனைக் கூறிவரும் மத்திய அரசு தற்போது, மேலும் 118 செயலிகளுக்குத் தடை விதித்துள்ளது. இந்தப் பட்டியலில், லுடோ வேர்ல்ட், வீசாட், பப்ஜி உள்ளிட்ட செயலிகளும் அடங்கியுள்ளன. இந்தியாவில்…

மேலும்...

முன்னாள் முதல்வரின் உடல் நிலை கவலைக்கிடம்!

கவுஹாத்தி (01 செப் 2020): கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அசாம் மாநில முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான தருண் கோகாய்(85) உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பாதிக்கப்பட்ட தருண் கோகாய் கவுஹாத்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்றிரவு திடீரென அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலைக்கு சென்றது. இதனால் தருண் கோகாய்-க்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை மருத்துவர்கள் செய்து வருகின்றனர். இந்த தகவலை…

மேலும்...

டாக்டர் கஃபீல்கானை உடனே விடுவியுங்கள்!- அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

லக்னோ (01 செப் 2020): டாக்டர் கஃபீல்கானை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த கூட்டமொன்றில் அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் பேசியதாக அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.”அவரின் பேச்சு வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டும் நோக்கில் இல்லை, தேசிய ஒற்றுமைக்கு அழைப்பு விடுக்கும் வகையிலேயே இருந்தது,” என்று கூறி நீதிமன்றம் அந்த…

மேலும்...

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மரணம்!

புதுடெல்லி (31 ஆக 2020): முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். 84 வது வயதில் அவரது உயிர் பிரிந்தது. பிரணாப் முகர்ஜி கடந்த 9-ந்தேதி தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்தார். எனவே அவர் மறுநாள் டெல்லி ஆர்.ஆர்.ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அவரது மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே டாக்டர்கள் 5 மணி நேரம் ஆபரேஷன் செய்து அதை அகற்றினர். ஆனால் ஆபரேஷனுக்குப்…

மேலும்...

இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீட்டிப்பு!

புதுடெல்லி (31 ஆக 2020): இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் இருந்து கடந்த ஜூன் மாதம் முதல் மத்திய அரசு படிப்படியாக தளர்வுகளை அளித்து வருகிறது. கொரோனா கட்டுக்குள் வரவில்லையென்றாலும், மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஊரடங்கின் 4 ஆம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு நேற்று முன் தினம் வெளியிட்டது. இதில்,…

மேலும்...

பிரசாந்த் பூஷணுக்கு செம தண்டனை!

புதுடெல்லி (31 ஆக 2020): கோர்ட் அவமதிப்பு வழக்கில் பிரசாநத் பூஷணுக்கு ஒரு ரூபாய் தண்டனை வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே ஹார்லி டேவிட்ஸன் பைக்கில் அமர்ந்தவாறு கடந்த ஜூன் மாதம் ஒரு புகைப்படம் எடுத்திருந்தார். அந்தப் படம் குறித்து பிரசாந்த் பூஷண், முகக்கவசம், ஹெல்மெட் இல்லாமல் அமர்ந்த தலைமை நீதிபதி என்று டுவிட்டரில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் விமர்சித்தார். மேலும் நீதித்துறையின் செயல்பாடுகள் கடந்த 6 வருடங்களாக…

மேலும்...