மசூதியை கொரோனா தனிமைப்படுத்தல் முகாமுக்காக உதவ முன் வந்த மசூதி நிர்வாகம்!

கொல்கத்தா (10 மே 2020): மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு மசூதியை கொரோனா தனிமைப்படுத்தல் முகாமுக்காக பயன்படுத்திக் கொள்ள மசூதி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிவேகத்தில் பரவி வருகிறது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த மசூதி நிர்வாகம், கொல்கத்தா பெங்காலி பஜார் மசூதியின் மூன்றாவது தளத்தை கொரோனா தனிமைப்படுத்தல் முகாமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என…

மேலும்...

அமித் ஷா உடல் நிலை குறித்து அவதூறு பரப்பிய நான்கு இளைஞர்கள் கைது!

அகமதாபாத் (10 மே 2020): மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடல் நிலை குறித்து அவதூறு பரப்பியதாக நான்கு இளைஞர்களை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உடல்நிலை குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக நான்கு முஸ்லிம் இளைஞர்கள் சனிக்கிழமை குஜராத்தின் அகமதாபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஷாவின் உடல்நலம் குறித்து தவறான தகவல்களை பரப்பியதற்காக உள்ளூர் குற்றப்பிரிவு போலீசார் நான்கு பேரை கைது செய்துள்ளதாக சிறப்பு போலீஸ் கமிஷனர்…

மேலும்...

முஸ்லிம் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்திய ஜீ நியூஸ் செய்தியாளர் மீது வழக்கு பதிவு!

கோழிக்கோடு (10 மே 2020): முஸ்லிம் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் விவாதம் நடத்திய ஜீ நியூஸ் செய்தியாளர் சுதீர் சவுத்ரி மீது ஜாமீன் பெற முடியாத வகையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள மாநில வழக்கறிஞர் கவாஸ் அளித்த புகாரின் அடிப்படையில் சுதிர் சவுத்ரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்ற மார்ச் 11 ந்தேதி ஜீ நியூஸ் சேனைல் அவசியமில்லாமல் ஜிஹாத் என்ற சொல்லை அவதூறாக பயன்படுத்தி குறிப்பிட்ட மதத்தினரின் மனதை புண்படுத்தும்…

மேலும்...

நான் நலமுடன் உள்ளேன் – வதந்திகளுக்கு அமித் ஷா முற்றுபுள்ளி!

புதுடெல்லி (09 மே 2020): தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும், முழு உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பல்வேறு அமைச்சரவைக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட புகைப்படங்களில் அமித் ஷா சோர்வாக இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இவ்வாறான புகைப்படங்களைக் கொண்டு, அமித் ஷா எதிர்ப்பாளர்கள் அவருக்கு நோய் ஏற்பட்டு விட்டதாக உறுதி செய்யப்படாத…

மேலும்...

தப்லீக் ஜமாஅத் தலைவர் பேசியதாக வைரலான ஆடியோ போலியானது: விசாரணையில் தகவல்!

புதுடெல்லி (09 மே 2020): கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பிறப்பித்த உத்தரவுகளை பின்பற்ற வேண்டாம் என்பதாக டெல்லி தப்லீக் ஜமாஅத் தலைவர் மவுலானா சாத் காந்தல்வி பேசியதாக வெளியான ஆடியோ போலியானது என விசாரணை முடிவு வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு முன்பு டெல்லியில் கூடிய தப்லீக் ஜமாஅத் ஆலோசனை கூட்டம் பின்பு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டவுடன் கலைக்கப்பட்டது. எனினும் கொரோனாவை தப்லீக் ஜமாஅத்தினர்தான் பரப்பினர் என்ற பொய்யான குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் பரப்பின. மேலும் சமூக ஊடகங்களிலும் போலியான…

மேலும்...

அடுத்த அதிர்ச்சி – ஸ்டேட் பேங்கில் ரூ 400 கோடியை பெற்று தப்பிச் சென்ற ராம்தேவ் நிறுவனம்!

புதுடெல்லி (09 மே 2020): ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிடம் ரூ 400 கோடி கடனாக பெற்று தற்போது வெளிநாடு தப்பியோடிய தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை மையமாக வைத்து செயல்பட்டு வந்த பாஸ்மதி அரிசி ஏற்றுமதியாளர் ராம் தேவ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் பணமோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு, சுமார் 400 கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் இருந்த நிலையில், தற்போதுதான் அது குறித்து சிபிஐயிடம் புகார்…

மேலும்...

இந்தியாவில் 60 ஆயிரத்தை எட்டும் கொரோனா பாதிப்பு – பலி எண்ணிக்கை 1981 ஆக உயர்வு!

புதுடெல்லி (09 மே 2020): இந்தியாவில் கொரோனாவால் 59,662 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1981 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. தற்போது கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. உயிரிழப்பும் கணிசமாக உயர்கிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று…

மேலும்...

112 வயதிலும் உழைத்து சம்பாதிக்கும் முதியவர் முஹம்மது அலி!

ஐதராபாத் (09 மே 2020): ஐதராபாத்தை சேர்ந்த 112 வயது முதியவர் முஹம்மது அலி இன்று வரை உழைத்து சம்பாதித்து தனது தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார். நிஜாமாபாத்தை சேர்ந்த முஹம்மது அலி தினமும் சைக்கிளில் இஸ்லாமிய மதம் குறித்த புத்தகங்களை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். தினமும் ஐதராபாத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சைக்கிளில் சென்று புத்தகங்களை விற்பனை செய்து வருகிறார். வீதிகள், வீடுகள் மட்டுமல்லாமல், மசூதிகளிலும் சென்று புத்தகங்களை விற்பனை செய்வது முஹம்மது அலியின்…

மேலும்...

மது கடைகளில் மது விற்பனைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!

புதுடெல்லி (08 மே 2020) மது விற்பனையை மது கடைகளில் விற்காமல் ஆன்லைன் மூலம் மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட மதுக்கடைகள் சுமார் 40 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநில மதுபானக் கடைகளிலும் குடிகாரர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கிடையில் மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் போராட்டத்தில் குதித்துள்ளன. இந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் மதுவிற்பனையை தடைசெய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 181 பயணிகளுடன் முதல் விமானம் கொச்சி வருகை!

கொச்சி (07 மே 2020): கொரோனாவால் உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 181 பயணிகளுடன் முதல் விமானம் அபுதாபியிலிருந்து வியாழன் இரவு கொச்சி விமான நிலையம் வந்திறங்கியது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் வளைகுடா நாடுகளும் அடங்கும். மேலும் கொரோனா பரவல் காரணமாக விமான போக்குவரத்து தடை பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். இவ்வாறு பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க…

மேலும்...