கொச்சி (07 மே 2020): கொரோனாவால் உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 181 பயணிகளுடன் முதல் விமானம் அபுதாபியிலிருந்து வியாழன் இரவு கொச்சி விமான நிலையம் வந்திறங்கியது.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் வளைகுடா நாடுகளும் அடங்கும்.
மேலும் கொரோனா பரவல் காரணமாக விமான போக்குவரத்து தடை பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர்.
இவ்வாறு பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 64 விமானங்கள் தயார்ப்படுத்தப்பட்டு அவர்களை மீ்ட்டு அழைத்து வரும் நடவடிக்கையை மத்திய அரசு துவங்கியுள்ளது. இதன்படி ஏர்இந்தியா விமானம் வியாழன் அன்று ஐக்கிய அரபு அமீரகம் சென்றது. அங்கு அபுதாபி விமான நிலையத்திலிருந்து 49 கர்ப்பிணிகள் உள்பட 181 பயணிகளை சுமந்து கொண்டு கேரள மாநிலம் கொச்சி விமான நிலையம் வந்திறங்கியது. இந்திய நேரம் இரவு 10:30 க்கு விமானம் கொச்சி வந்தது.
இந்நிலையில், ஊரடங்கால் சொந்த நாடுகளுக்கு செல்ல முடியாமல் இந்தியாவில் சிக்கியுள்ளவர்களை திருப்பி அனுப்பி வைப்பதற்காக ஏர்இந்தியா நிறுவனம் முன்பதிவு மையத்தினை திறந்துள்ளது.
Passengers from the first flight from #UAE to go through #COVID-19 PCR tests at Cochin airport. #VandeBharatMission pic.twitter.com/ghfbswONoX
— Onmanorama (@Onmanorama) May 7, 2020