மோடியின் சரிவு – சர்வதேச ஊடகங்கள் விமர்சனம்!

புதுடெல்லி (13 பிப் 2020): பிரதமர் மோடியின் சமீபத்திய சரிவுகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது. அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வராக பதவியேற்கவுள்ளார். பல முக்கிய தலைவர்கள் முகாமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டபோதும், குடியுரிமை சட்டம், மக்கள் விரோத போக்கு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பாஜக 8 இடங்களில் மட்டும்தான் வெற்றிபெற…

மேலும்...

முஸ்லிம் சிறுவர்கள் மீது போலீஸ் கொடூர சித்ரவதை – உண்மை கண்டறியும் குழு அறிக்கை!

லக்னோ (13 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியதாக பொய் கூறி உபி சிறுவர்கள் மீது போலீஸ் கொடூர சித்ரவதைகளை அரங்கேற்றியுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் அமைதி வழியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் உத்திர பிரதேசத்தில் நடந்தபோது, போலீசார் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி பலரை கொன்று குவித்தனர். பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் போலீசார் முதலில் அதனை மறுத்தனர் பின்பு ஒத்துக் கொண்டனர். இந்நிலையில் உண்மையில்…

மேலும்...

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் வைத்த ஆப்பு!

புதுடெல்லி (13 பிப் 2020): தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் தங்களது குற்றப் பின்னணி தொடா்பான தகவல்களைத் தோ்தல் ஆணையத்திடமும் பொது வெளியிலும் தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல்சாசன அமா்வு கடந்த 2018-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவு முறையாகக் கடைப்பிடிக்கப்படாததால், மத்திய அரசு, தோ்தல் ஆணையம் ஆகியவற்றின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளக் கோரி பாஜக…

மேலும்...

இளம் பெண்ணை ஆசிரமத்தில் வைத்து வன்புணர்வு செய்த சாமியார் கைது!

பிரயாக்ராஜ் (13 பிப் 2020): உத்திர பிரதேசத்தில் இளம் பெண் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். சஞ்சீவ் குமார் ராய் என்கிற சஞ்சீவ் மஹாராஜ் என்ற சாமியார் அவரது ஆசிரமத்திற்கு பூ கொண்டு சென்ற 14 வயது இளம் பெண்ணை பிரசாதம் தருவதாகக் கூறி ஏமாற்றி ஆசிரமத்தின் உள்ளே அழைத்துச் சென்று வன்புணர்வு செய்துள்ளார். அவரிடமிருந்து தப்பிக்க அந்தப் பெண் முயற்சித்தும் முடியவில்லை என அவரது தாயிடம் கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி…

மேலும்...

மின்னணு வாக்குப்பதிவு முறைதான் – தலைமை தேர்தல் ஆணையர் திட்டவட்டம்!

புதுடெல்லி (12 பிப் 2020): வாக்குச்சீட்டு முறைக்கு மாறுவது என்ற கேள்விக்கே இடமில்லை என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். ஈவிஎம் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும் வாக்குச் சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்றும் எதிர் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய சுனில் அரோரா, மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், ஒரு காரைப் போல, ஒரு பேனாவைப் போல…

மேலும்...

ப.சிதம்பரம் மீது மகளிர் காங்கிரஸ் தலைவி காட்டம்!

புதுடெல்லி (12 பிப் 2020): ஆம் ஆத்மி கட்சியை பாராட்டிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை மகளிர் காங்கிரஸ் தலைவி ‌ஷர்மிஸ்தா முகர்ஜி கடுமையாக சாடியுள்ளார். டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. பிரித்தாளும் மோசமான…

மேலும்...

காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் ராஜினாமா!

புதுடெல்லி (12 பிப் 2020): டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று அக் கட்சியின் பொறுப்பாளர் பி.சி.சாக்கோ ராஜினாமா செய்துள்ளார். 70 இடங்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பாஜக எட்டு இடங்களை கைபற்றியது. ஆனால் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. காங்கிரஸ் வேட்பாளர்களில் 63 பேர் டெபாசிட்டுகளை இழந்துள்ளனர். இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவை…

மேலும்...

குடிமக்கள் பட்டியல் இணையத்திலிருந்து மாயம் – உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல்!

புதுடெல்லி (12 பிப் 2020): அஸ்ஸாம் குடிமக்கள் பட்டியல் இணையத்திலிருந்து மாயமாகியுள்ளதாக உள்துறை அமைச்சகம அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட அசாம் இறுதி குடிமக்கள் பட்டியலின் தரவுகள் மாநில இணையதளத்தில் இருந்து மாயமாகியுள்ளன. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில்,சில தொழில்நுட்ப கோளாறு காரணாமக கிளவுடில் அது தென்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. விரைவில் இந்த பிரச்சினை சரிசெய்யப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து நாட்டில்…

மேலும்...

ஹோட்டலில் அடைத்து வைத்து வன்புணர்வு – பாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் புகார்!

லக்னோ (12 பிப் 2020): உத்திர பிரதேசம் மாநிலம் பாஜக எம்.எல்.ஏ உள்ளிட்ட ஆறு பேர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். உத்திர பிரதேசம் படேஹி காவல் நிலையத்தில் அந்த பெண் அளித்துள்ள புகாரில், “என் கணவர் கடந்த 2007 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார். என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாஜக எம்.எல்.ஏ ரவீந்திரநாத் திரிபாதியின் மருமகன் என்னை பல வருடங்கள் ஏமாற்றி வந்தார். மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு உ.பி…

மேலும்...

முன்னாள் முதல்வரின் மகன் மர்ம மரணம்!

லண்டன் (12 பிப் 2020): அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வரின் மகன் லண்டனில் மர்மமான முறையில் இறந்துள்ளார். அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வராக இருந்தவர் காங்கிரசைச் சேர்ந்த கலிக்கோ புல். இவரது மகன் ஷுபான்சோ புல் (20) என்பவர் இங்கிலாந்தில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றில் படித்து வந்தார். இந்நிலையில் சசெக்ஸில் பிரைட்டன் என்ற இடத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் அவர் இறந்து கிடந்துள்ளார். தற்போது ஷுபான்சு உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவது தொடர்பான பணிகள் நடைபெற்று…

மேலும்...