முஸ்லிம் சிறுவர்கள் மீது போலீஸ் கொடூர சித்ரவதை – உண்மை கண்டறியும் குழு அறிக்கை!

Share this News:

லக்னோ (13 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியதாக பொய் கூறி உபி சிறுவர்கள் மீது போலீஸ் கொடூர சித்ரவதைகளை அரங்கேற்றியுள்ளது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் அமைதி வழியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டம் உத்திர பிரதேசத்தில் நடந்தபோது, போலீசார் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி பலரை கொன்று குவித்தனர். பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் போலீசார் முதலில் அதனை மறுத்தனர் பின்பு ஒத்துக் கொண்டனர்.

இந்நிலையில் உண்மையில் உ.பி.யில் நடப்பது என்ன? என்பது குறித்து உண்மை கண்டறியும் குழு ஆய்வு மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக முஸ்லிம் சிறுவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறையில் அடைத்துள்ள போலீஸ், அவர்களை பூட்ஸ் காலால் உதைத்து கொடுமைப் படுத்தியுள்ளது. மேலும் போராடடம் நடைபெற்ற பகுதியில் உள்ள மதரஸாக்களில் நுழைந்து சிறுவர்களை கண்மூடித்தனமாக தாக்கியதோடு அவர்களை இழுத்துச் சென்று சிறையில் அடைத்துள்ளது. அவர்கள் இரவில் உறங்கக் கூடாது, உட்காரக் கூடாது, சிறுநீர் கழிக்கக் கூடாது போன்ற கொடுஞ் சித்ரவதைகளை செய்துள்ளது.

மேலும் சிறுவர்களை கடுங்குளிரில் நிறுத்தி, அவர்கள் உறங்கினால் அடித்து எழுப்பியுள்ளனர். மேலும் குளிர் தாங்காமல் போர்வை கேட்டால், அங்கிருந்த சாக்கினை கொடுத்து போர்த்த சொல்லியுள்ளனர்.

முஸாபர் நகர் மாணவர்கள் வெள்ளிக்கிழமை நோன்பு பிடித்திருந்தபோதும், அவர்களை ஜெய்ஸ்ரீராம் என கூறக்கூறி நோன்பு திறக்கக்கூட தண்ணீர் வழங்காமல் போலீஸ் கொடுமை படுத்தியுள்ளது.

இவை அனைத்தும் 14 சிறுவர்களிடம் பெற்ற வாக்குமூலங்களின் அடிப்படையில் உண்மை கண்டறியும் குழு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

இதுவல்லாமல் முஸ்லிம் வீடுகளில் புகுந்த வன்முறை கும்பல் பல வீடுகளில் உள்ள பொருட்களையும் திருடிச் சென்றுள்ளது.

இந்த கொடுமைகள் குறித்து விசாரணை கமிஷன் அமைத்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Share this News:

Leave a Reply