குடிமக்கள் பட்டியல் இணையத்திலிருந்து மாயம் – உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல்!

Share this News:

புதுடெல்லி (12 பிப் 2020): அஸ்ஸாம் குடிமக்கள் பட்டியல் இணையத்திலிருந்து மாயமாகியுள்ளதாக உள்துறை அமைச்சகம அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட அசாம் இறுதி குடிமக்கள் பட்டியலின் தரவுகள் மாநில இணையதளத்தில் இருந்து மாயமாகியுள்ளன.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில்,சில தொழில்நுட்ப கோளாறு காரணாமக கிளவுடில் அது தென்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. விரைவில் இந்த பிரச்சினை சரிசெய்யப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் இத்தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply