கொடூரத்தின் உச்சம் – 3 வயது குழந்தை வன்புணர்ந்து படுகொலை!

லக்னோ (12 பிப் 2020): உத்தரப் பிரதேசத்தில் 3 வயது பெண் குழந்தை வன்புணர்ந்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் சீதாப்பூர் மாவட்டத்தில் மஹோலி பகுதியில் 3 வயது குழந்தை நேற்று காணாமல் போனது. பெற்றோர்கள், உறவினர்கள் காணாமல் போன குழந்தையைத் தேடி வந்தனர். அப்போது, குழந்தையின் உடல் அருகில் உள்ள பகுதியில் ஒரு சாக்குப்பையில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை விசாரித்த போலீசார் அதிர…

மேலும்...

டெல்லியில் பரபரப்பு – ஆம் ஆத்மி எம்.எல்.ஏ மீது துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!

புதுடெல்லி (12 பிப் 2020): டெல்லியில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆம் ஆத்மி தொண்டர் உயிரிழந்துள்ளார். டெல்லியில் கடந்த சில தினங்களாகவே துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டக் களத்தில் மூன்று முறை துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் செவ்வாயன்று டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்ட நிலையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ நரேஷ் யாதவ் அவரது ஆதரவாளர்களுடன் வெற்றியை கொண்டாடிவிட்டு, கோவிலிலிருந்து திரும்பி வந்து…

மேலும்...

டெல்லியில் ஆம் ஆத்மியின் ஐந்து முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றி!

புதுடெல்லி (12 பிப் 2020): நடைபெற்று முடிந்துள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக போட்டியிட்ட ஐந்து முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளதோடு, ஆம் ஆத்மி 62 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் ஆம் ஆத்மி சார்பில் ஐந்து முஸ்லிம் வேட்பாளர்களும் களத்தில் இறக்கப்பட்டனர். டெல்லியின் ஒக்லா தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் அமானத்துல்லா கான் தன்னை எதிர்த்து போட்டியிட்ட…

மேலும்...

ஷஹீன் பாக் இருக்கும் தொகுதியில் பாஜகவை டெபாசிட் இழக்க வைத்த அமானதுல்லா கான்!

புதுடெல்லி (11 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்க்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வரும் ஷஹீன் பாக், ஜாமியா பல்கலைக் கழகம் இருக்கும் தொகுதியில் பாஜக டெபாசிட் இழந்துள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளதோடு, ஆம் ஆத்மி 62 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் டெல்லியின் போராட்டக்களமாகியிருக்கும் ஷாஹின்பாக், ஜாமியா பல்கலைக்கழகம் ஆகியவை அமைந்திருக்கும் ஓக்லா தொகுதி. மக்கள் ஆம் ஆத்மி வேட்பாளர் அமானதுல்லா கானை வெற்றி பெறச்…

மேலும்...

மக்களுக்கு மன் கி பாத் தேவையில்லை – மோடி மீது உத்தவ் தாக்கரே தாக்கு!

மும்பை (11 பிப் 2020): மக்களுக்கு ‘மன் கி பாத் தேவையில்லை, ஜான் கி பாத் தான் அவசியம்’ என்று டெல்லி தேர்தல் முடிவு குறித்து உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளதோடு, ஆம் ஆத்மி 62 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. இந்த நிலையில், டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து மகாராஷ்டிரத்தின் முதல்வரும், சிவசேனை கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ள கருத்தில், ‘டெல்லி…

மேலும்...

என் மார்பில் சுட்டாலும் என் ஆதாரங்களை காட்ட மாட்டேன் – அசாதுத்தீன் உவைசி!

புதுடெல்லி (11 பிப் 2020): என் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினாலும் என் குடியுரிமை ஆதாரங்களை காட்ட மாட்டேன் என்று அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் கர்னூலில் நடைபெற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட கூட்டத்தில் பேசிய உவைசி, “முஸ்லிம்களிடம் இருந்த மரணம் பயம் இப்போது நீங்கியிருக்கிறது. அதற்கு காரணம் பாஜகவின் வெறுப்பு பேச்சு. நான் பாஜகவினருக்கு கூறிக் கொள்கிறேன், முஸ்லிம்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளீர்கள். அதற்காக முஸ்லிம்கள் அஞ்சப்போவதில்லை. அவர்களுக்கு மரண பயம்…

மேலும்...

பாஜகவுக்கு மாணவர்களும் பெண்களும் தக்க பாடம் புகட்டியுள்ளனர் – மம்தா பானர்ஜி!

புதுடெல்லி (11 பிப் 2020): மாணவர்களும் பெண்களும் பாஜகவுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளனர் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியின் மூலம் 3ஆவது முறையாக தொடர்ந்து ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் ஆம் ஆத்மி பெற்றுள்ளது. இந்த நிலையில், ஆம்ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்தார். அதில்,டெல்லியில் ஜனநாயகம் வெற்றிபெற்றுள்ளது, வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களுக்கு…

மேலும்...

டெல்லியில் ஆம் ஆத்மி 63 இடங்களில் வெற்றி!

புதுடெல்லி (11 பிப் 2020): டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 63 இடங்களை கைபற்றியுள்ளது. டெல்லியில் கடந்த 8 ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்த டில்லி சட்டசபையில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் இன்று ( 11 ம் தேதி) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.. கிட்டத்தட்ட முடிவுகள் அறிவிக்கப் பட்ட நிலையில் ஆம் ஆத்மி கட்சி 63 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. பாஜக 7…

மேலும்...

டெல்லியில் அடுத்தடுத்து பாஜக இழக்கும் இடங்கள் – 62 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி!

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 62 இடங்களை கைபற்றி அசுர வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் கடந்த 8 ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்த டில்லி சட்டசபையில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் இன்று ( 11 ம் தேதி) காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. பாஜக 8 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் ஒரு…

மேலும்...

டெல்லியில் ஆம் ஆத்மி 60 இடங்களை கைபற்றி அசுர வெற்றி!

புதுடெல்லி (11 பிப் 2020): டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 60 இடங்களை கைபற்றி அசுர வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் கடந்த 8 ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்த டில்லி சட்டசபையில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் இன்று ( 11 ம் தேதி) காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி 60 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. பாஜக 10 இடங்களிலும்…

மேலும்...