டெல்லியில் பரபரப்பு – ஆம் ஆத்மி எம்.எல்.ஏ மீது துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!

Share this News:

புதுடெல்லி (12 பிப் 2020): டெல்லியில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆம் ஆத்மி தொண்டர் உயிரிழந்துள்ளார்.

டெல்லியில் கடந்த சில தினங்களாகவே துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டக் களத்தில் மூன்று முறை துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்நிலையில் செவ்வாயன்று டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்ட நிலையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ நரேஷ் யாதவ் அவரது ஆதரவாளர்களுடன் வெற்றியை கொண்டாடிவிட்டு, கோவிலிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில் அதிர்ஷ்ட வசமாக நரேஷ் யாதவ் உயிர் தப்பினார். அவருடன் சென்ற அவரது ஆதரவாளர் துப்பாக்கிக் குண்டுக்கு பலியாகியுள்ளார். இன்னொரு தொண்டருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டுள்ள சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply