மக்களுக்கு மன் கி பாத் தேவையில்லை – மோடி மீது உத்தவ் தாக்கரே தாக்கு!

Share this News:

மும்பை (11 பிப் 2020): மக்களுக்கு ‘மன் கி பாத் தேவையில்லை, ஜான் கி பாத் தான் அவசியம்’ என்று டெல்லி தேர்தல் முடிவு குறித்து உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளதோடு, ஆம் ஆத்மி 62 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது.

இந்த நிலையில், டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து மகாராஷ்டிரத்தின் முதல்வரும், சிவசேனை கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ள கருத்தில், ‘டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதற்கு அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் டெல்லி மக்களை வாழ்த்துகிறேன். நாடு ‘மன் கி பாத்’ அல்லாமல் ‘ஜன் கி பாத்’ வழியில் நடக்கும் என மக்கள் டெல்லி தேர்தல் மூலமாக காட்டியுள்ளனர்.

கெஜ்ரிவாலை பாஜக ஒரு பயங்கரவாதி என்று அழைத்தாலும் அவரை தோற்கடிக்க முடியவில்லை’ என்று தெரிவித்துள்ளார். பாஜக நாடுமுழுவதிலும் இருந்து நட்சத்திர பேச்சாளர்களை , முதல்வர்களை களமிறக்கி பிரச்சாரம் மேற்கொண்ட போதும் டெல்லி மக்கள் வளர்ச்சி தந்த ஆம் ஆத்மி கட்சிக்கே வாக்களித்துள்ளனர். ” என்று தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply