இந்தியாவின் ஹிஜாப் விவகாரத்திற்கு சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பு கண்டனம்!

புதுடெல்லி (15 பிப் 2022): இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்துள்ளமை மற்றும் முஸ்லிம்கள் மீதான பல்வேறு தாக்குதல்களுக்கு சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாரில் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்தது உள்ளிட்ட விவகாரங்களுக்கு சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பு ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் முஸ்லிம் பெண்களை துன்புறுத்தும் சம்பவங்கள் குறித்தும், கண்டனம் தெரிவித்துள்ளது. முஸ்லிம்கள் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதான…

மேலும்...

பள்ளி மாணவியின் ஹிஜாபை கழற்ற சொன்னதால் பரபரப்பு – VIDEO

மாண்டியா (14 பிப் 2022): மாண்டியாவில் உள்ள ரோட்டரி எஜுகேஷனல் சொசைட்டி பள்ளி மாணவர்கள், பள்ளிக்குள் நுழைவதற்கு முன்பு ஹிஜாபை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கர்நாடகாவில் பள்ளிகள் பிப்ரவரி 10 அன்று மீண்டும் திறக்கப்பட்டன. இதற்கிடையே கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுப்படி, கல்வி நிறுவனங்களுக்குள் ஹிஜாப் அணிவதைத் தடைசெய்யும் அரசின் உத்தரவை மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சூழலில் ஏற்பட்டுள்ளது . இந்நிலையில்…

மேலும்...

இந்தியப் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு!

மும்பை (14 பிப் 2022): இன்று (திங்கள் கிழமை) இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் பிரச்னை எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் என்ற அபாயத்தால் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்திருக்கிறது. வாரத்தின் முதல் நாளிலேயே இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர். சென்செக்ஸ் 1,500 புள்ளிகள் வரை சரிந்து வர்த்தகம் நடைபெற்று வருகிறது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டியும்…

மேலும்...

முஸ்லிம் பெண்களுக்கு அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கோரிக்கை!

புதுடெல்லி (14 பிப் 2022): ஹிஜாப் குறித்த தவறான எண்ணத்தை நீக்கும் கருத்துகளை அனைவருக்கும் பரப்புங்கள் என்று முஸ்லிம் பெண்களுக்கு அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கோரிக்கை வைத்துள்ளது. கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளில் விதிக்கப்பட்ட ஹிஜாப் தடை நாடெங்கும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பல மாநிலங்களில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாபுக்கு ஆதரவாக போராட்டங்களில் குதித்துள்ளனர். இந்நிலையில் சமூக ஊடக அமர்வு ஒன்றில் அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய பொதுச் செயலாளர் மௌலானா உம்ரைன் மஹ்ஃபூஸ் ரஹ்மானி…

மேலும்...

ஹிஜாப் விவகாரம் – பள்ளிகளை சுற்றி 144 தடை உத்தரவு!

உடுப்பி (13 பிப் 2022): கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெங்களூரில் பள்ளி- கல்லூரிகளை சுற்றி 144 தடை உத்தரவு வருகிற 22-ந் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக உடுப்பி மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளிகளை சுற்றி நாளை (14-ந்தேதி) காலை 6 மணி முதல் 19-ந்தேதி மாலை 6…

மேலும்...

ஹிஜாப் ஆதரவு பேரணிக்கு தடை!

அஹமதாபாத் (13 பிப் 2022): குஜராத்தில் ஹிஜாப் ஆதரவு பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர் மேலும் போராட்டங்களில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுத்துள்ளனர். . கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடைக்கு எதிராக போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு ஆதரவாக சூரத்தில் முஸ்லிம் அமைப்புகள் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளன. AIMIM இன் சூரத் பிரிவு தலைவர் வாசிம் குரேஷி மற்றும் கட்சி உறுப்பினர் நஸ்மா கான் உட்பட 20 பெண் எதிர்ப்பாளர்கள் பேரணியில் கலந்து கொள்ளவிருந்த நிலையில் அவர்களுக்கு தடை…

மேலும்...

ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராவார் – அசாதுதீன் ஒவைசி!

லக்னோ (13 பிப் 2022): ஒரு நாள் ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராக வருவார் என்று அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய ஒவைசி, ஹிஜாப் அணிந்த பெண்கள் மருத்துவர்களாகவும், மாவட்ட நீதிபதிகளாகவும், துணை மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளாகவும் (SDM) ஒரு நாள் இந்தியாவின் பிரதமராகவும் மாறுவார்கள் என்று கூறினார். ஹிஜாப் விவகாரம் குறித்து பேசிய அவர், “ஹிஜாப் அணிவதற்கான உரிமைக்காகப் போராடும்…

மேலும்...

நம்பர் பிளேட் இல்லாத காரில் ஈவிஎம் எந்திரம் – உபியில் பரபரப்பு!

பானிபட் (12 பிப் 2022): உத்தரபிரதேச மாநிலத்தில் நம்பர் பிளேட் இல்லாத ஒரு காரில் எலக்ட்ரானிக் ஓட்டுப் பதிவு இயந்திரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் நேற்று முந்தினம் (பிப்ரவரி 10ந்தேதி) 11 மாவட்டங்கள் அடங்கிய 58 தொகுதிகளில் நடைபெற்றது. காலை 7 மணியளவில் வாக்கு பதிவு தொடங்கியது மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடந்தது. இந்த நிலையில், அங்குள்ள கைரானா…

மேலும்...

ஹிஜாபை கழற்ற மாட்டோம் – அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் – VIDEO

அலிகார் (11 பிப் 2022): கர்நாடக அரசு, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதைத் தடை செய்ததற்கு எதிராக உத்திர பிரதேசம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் (AMU) மாணவர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலான மாணவர்கள் ஹிஜாப் அணிந்து, கோஷங்களை எழுப்பி, தாங்கள் விரும்பியதை அணிய சுதந்திரம் கோரினர். கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர முஸ்லீம் பெண்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப்…

மேலும்...

ஹிஜாப் விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி (11 பிப் 2022): ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர முஸ்லீம் பெண்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் ஹிஜாப் அணிய தடை…

மேலும்...