இந்தியாவின் ஹிஜாப் விவகாரத்திற்கு சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பு கண்டனம்!

Share this News:

புதுடெல்லி (15 பிப் 2022): இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்துள்ளமை மற்றும் முஸ்லிம்கள் மீதான பல்வேறு தாக்குதல்களுக்கு சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாரில் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்தது உள்ளிட்ட விவகாரங்களுக்கு சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பு ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

சமூக ஊடகங்களில் முஸ்லிம் பெண்களை துன்புறுத்தும் சம்பவங்கள் குறித்தும், கண்டனம் தெரிவித்துள்ளது.

முஸ்லிம்கள் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள், பல்வேறு மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான சட்டங்களின் சமீபத்திய போக்கு மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள், வளர்ந்து வரும் இஸ்லாமிய வெறுப்பைக் குறிக்கிறது என்று OIC கூறியுள்ளது.

முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும், குடிமக்களின் வாழ்க்கை முறையைப் பாதுகாக்கவும், வன்முறைச் செயல்களில் ஈடுபடுபவர்களை நீதியின் முன் நிறுத்தவும் OIC இந்தியாவை வலியுறுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply