GCC நாடுகளில் பணிபுரிபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

குவைத் (10 ஆகஸ்ட் 2025):  வளைகுடா (GCC) நாடுகளில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. குவைத் நாட்டிற்குச் செல்ல இனி தனியே விசா எடுக்கத் தேவையில்லை.  “ஆன் அரைவல்” விசா மூலம் இனி எவரும் குவைத்திற்கு எளிதாகச் செல்லலாம். சுற்றுலா செல்வோரும் இந்த விசாவை பயன்படுத்திக் கொள்ளலாம் என குவைத் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை, குவைத் நாட்டின் முதல் துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரான ஷேக் ஃபஹத் யூசுப் சவுத் அல்-சபாஹ் அறிவித்துள்ளார். குவைத் நாடு…

மேலும்...

பயங்கர ஆயுதங்களைக் கடத்த முயன்ற ஐந்து பேர் கத்தாரில் கைது!

தோஹா, கத்தார் (09 ஆகஸ்ட் 2025) :  கத்தார் நாட்டிற்குள் AK-47 உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கடத்த முயன்ற ஐந்து பேர் கத்தாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சின் குற்றப்புலனாய்வு துறை இவர்களைக் கைது செய்துள்ளது. இவர்கள் கத்தார் நாட்டுக்குள் ஏற்கனவே துப்பாக்கிகளை கடத்தி வந்ததும் சட்டவிரோதமாக விற்பனை செய்வதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.  கத்தாரில் கைது செய்யப்பட்ட மூவர் வெளிநாட்டினர் மற்றும் இரு நபர்கள் கத்தார் நாட்டு குடிமக்களாவர். (inneram.com) துப்பாக்கிகளை சிலர்…

மேலும்...

புகைப்படத்தைப் பரப்பினால், ஒரு லட்சம் ரியால் அபராதம்!

தோஹா (05 ஆகஸ்ட் 2025):  முன் அனுமதி பெறாமல் ஒருவரின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை இணையத்தில் பரப்பினால், ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது 100,000 கத்தார் ரியால் அபராதம் (இந்திய ரூபாய் மதிப்பில் 23.5 லட்சம்) விதிக்கப்படும் என கத்தார் நாடு அறிவித்துள்ளது. இதற்குரிய சட்டத் திருத்தங்களை இன்று கத்தார் அரசு வெளியிட்டுள்ளது. மேலும் இது சைபர் குற்றமாகக் கருதப்படும் என்றும் அறிவித்துள்ளது. கத்தார் நாட்டில் வசிக்கும் மக்கள் மற்றும் வருகை தரும் சுற்றுலா பயணிகள், நகரின் பொது…

மேலும்...

உலகின் 3 பாதுகாப்பான நாடுகள் எவை தெரியுமா?

குறைவான குற்றங்கள் மற்றும் அதிக பாதுகாப்புத் தரநிலைகளைக் கொண்ட உலகின் மிகப் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. ஒரு நாட்டில் நடைபெறும் குற்ற குறியீடுகள், பாதுகாப்பு குறியீடுகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அந்த நாட்டின் குற்றச்செயல்களின் அளவைக் கணிப்பதில் Numbeo நிறுவனம் புகழ் பெற்றது. Numbeo நிறுவனம் 2025 ஆம் ஆண்டு இடைவருட பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. இதில் இடம் பெற்ற 148 நாடுகளில், கத்தார் 84.6 என்ற பாதுகாப்பு மதிப்பெணுடன்…

மேலும்...
சவூதியில் உம்ரா விசா மீண்டும் தொடக்கம்!

சவூதியில் உம்ரா விசா மீண்டும் தொடக்கம்!

இன்று ஜூன் 10 முதல் உம்ரா விசா வழங்குவதை மீண்டும் தொடங்குகிறது சவூதி அரேபியா.  உம்ரா பயணம் மேற்கொள்ளவிருக்கும் பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன? ஹஜ் யாத்திரிகர்களுக்கு சிறந்த வசதிகளையும் பாதுகாப்பையும் வழங்கும் நோக்கில் ஹஜ் பருவத்திற்கு முன்னதாக உம்ரா விசா தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. ஹஜ் 2025 பருவம் முடிவுக்கு வந்ததை அடுத்து, 2025 ஜூன் 10 முதல் உம்ரா விசா வழங்குவதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.  மகிழ்ச்சியான இச் செய்தியை வளைகுடா நாடுகள் உட்பட உலகமெங்கிலும்…

மேலும்...
ரமளான் பிறை காண பொதுமக்களுக்கு அழைப்பு!

ரமளான் பிறை காண பொதுமக்களுக்கு அழைப்பு!

தோஹா, கத்தார் (பிப்ரவரி 26, 2025):  எதிர்வரும் வெள்ளிக்கிழமை 28-02-2025 ஆம் தேதி மாலை புனித ரமளான் பிறை நிலவைக் காண முன்வருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது கத்தார் அமைச்சகம். எதிர்வரும் மார்ச் 1, 2025 அன்று வளைகுடா உட்பட உலகமெங்கும் ரமளான் நோன்பு மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கத்தாரில் உள்ள Crescent Sighting Committee , ரமளான் பிறை காண மேற்கண்ட அழைப்பினை விடுவித்துள்ளது. சூரிய அஸ்தமனத் தொழுகைக்குப் பிறகு பிறையைக் கண்ணால்…

மேலும்...

கத்தாரில் களை கட்டும் பேரீத்தம்பழத் திருவிழா!

தோஹா, கத்தார் (28 ஜூலை 2024) :  தோஹாவில் பிரபல சுற்றுலா தளமான சூக் வாகிஃப் (Souq Waqif ) இல், கடந்த ஜூலை 23 ஆம் தேதி பேரித்தம்பழத் திருவிழா கோலாகலமாகத் துவங்கியது.  திருவிழாவில் பங்கு பெறும் பேரீத்தம் பழங்கள் அனைத்தும் கத்தார் நாட்டில் விளைந்த பேரீத்தம் பழங்களாகும். துவங்கிய நான்கு நாட்களில் 81,492 கிலோகிராம் பேரிச்சம்பழங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.  இந்த அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளமான X இல்…

மேலும்...

சவூதியில் தமிழர்களுக்கான அடையாள அட்டை வசதி!

ரியாத், சவூதி (26 ஜூலை 2024): புலம் பெயர்ந்து வசிக்கும் தமிழர்களுக்கான நலவாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பது புலம்பெயர் தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கை. இது ஏற்கப்பட்டு, தமிழர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. சவூதி நாட்டில் வசிக்கும் தமிழர்களுக்காக இதற்குரிய சிறப்பு முகாமை ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்தி வருகிறது. தமிழின் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் கால் நூற்றாண்டுகளாக சேவையாற்றி வரும் அமைப்பு ரியாத் தமிழ்ச் சங்கம். அயலகத் தமிழர்களுக்கான நலவாரியம் தேவை எனும் கோரிக்கையை ரியாத்…

மேலும்...
அபராதத்தைச் செலுத்தாமல் பயணிக்க முடியாது - கத்தாரில் புதிய விதிமுறை

அபராதத்தைச் செலுத்தாமல் பயணிக்க முடியாது – கத்தாரில் புதிய விதிமுறை

தோஹா, கத்தார் (23 மே 2024): கத்தார் நாட்டில் வசிப்போருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றினை, கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் போக்குவரத்து பொது இயக்குநரகம் இன்று புதிய விதிமுறை-யாக வெளியிட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி 2024 முதல் சாலை, விமானம் மற்றும் கடல் மார்க்கமாக கத்தாரில் இருந்து வெளிநாடுகளுக்குப் பயணிப்போர் மீதான போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் ஏதும் பெற்றிருந்தால் அதனை முழுமையாகச் செலுத்தாமல் பயணிக்க இயலாது என்று  அறிவித்துள்ளது. (இந்நேரம்.காம்) உள்துறை அமைச்சகத்தின் செய்தியாளர்…

மேலும்...
பிரமிக்க வைத்த ரியாத் தமிழ்ச் சங்க இரத்த தான முகாம்

பிரமிக்க வைத்த ரியாத் தமிழ்ச் சங்க இரத்த தான முகாம்

ரியாத் (20 மே 2024): ரியாத் தமிழ்ச் சங்கம் கடந்த 17/05/2024 வெள்ளிக்கிழமை அன்று நடத்திய நிகழ்ச்சி,  மன்னர் பஹத் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் “உதிரம் கொடுப்போம்! உயிரைக் காப்போம்! ” என்ற திட்டத்தின் கீழ் இரத்த தான முகாம் (குருதிக் கொடை நிகழ்ச்சி) ஒன்றை மிகச் சிறப்பாக நடத்தி பலரின் புருவத்தை உயர்த்தியுள்ளது. “இரத்ததானம் உயிர்களைக் காக்கும்; இரத்ததான விழிப்புணர்வை அதிகரிப்போம்; தேவைப்படுபவர்களுக்கு பாதுகாப்பான, தரமுள்ள இரத்தம் காலத்தே கிடைப்பதை உறுதி செய்வோம். நாம்…

மேலும்...