இவ்வருடம் 10 லட்சம் ஹஜ் யாத்திரீகர்களுக்கு சவூதி அரேபியா அனுமதி!

ரியாத் (09 ஏப் 2022): இவ்வருடம் (2022) 10 லட்சம் ஹஜ் யாத்ரிகர்களுக்கு சவூதி அரேபியா அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா தொற்று நோய் பரவியதில் இருந்து வெளிநாட்டு ஹஜ் யாத்ரிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாத சூழ்நிலை இருந்தது. இதனை அடுத்து இந்த ஆண்டு உள்நாடு மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து ஒரு மில்லியன் மக்களை ஹஜ் செய்ய அனுமதிக்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளதாக சவூதி பிரஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும்…

மேலும்...

ஹிஜாபுக்கு தடை விதித்த மேலாளர் – பஹ்ரைனில் மூடப்பட்ட இந்திய உணவகம்!

மனாமா (27 மார்ச் 2022): பஹ்ரைனில் உள்ள இந்திய உணவகம் ஒன்றில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் உணவகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து அந்த உணவகம் அதிகாரிகளால் மூடப்பட்டது. பஹ்ரைன் தலைநகர் மனாமாவின் அட்லியா பகுதியில் அமைந்துள்ள பஹ்ரைன் லான்டர்ன்ஸ் – இந்திய உணவகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, உணவகம் தங்களது சமூக ஊடகப் பக்கத்தில் முறைப்படி மன்னிப்புக் கேட்டது. 35 ஆண்டுகளாக சேவையில் உள்ள உணவகம், மேலாளர் செய்த தவறுக்கு வருந்துவதாக…

மேலும்...

முதல்வர் ஸ்டாலினுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு வழங்கிய பிஎம்டபிள்யூ கார்!

துபாய் (25 மார்ச் 2022): தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள ஐக்கிய அரபு அமீரக அரசு பிஎம்டபிள்யூ கார் வழங்கியுள்ளது. 4 நாள் பயணமாக துபாய் மற்றும் அபுதாபிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் தனி விமானம் மூலம் நேற்று சென்று அடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ கண்காட்சி, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் நடத்தப்படும் முதல் உலக கண்காட்சி. இந்த உலகக் கண்காட்சி, துபாய்…

மேலும்...

வீட்டில் ஒரே அறையில் தங்கியிருத்தவரை கொலை செய்தவருக்கு மரண தண்டனை!

துபாய்(13 மார்ச் 2022): துபாயில் அறையில் ஒன்றாக தங்கியிருத்தவரை கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. துபாய் அல்ஐனில் வீட்டில் ஒரே அறையில் தங்கியிருந்த சக நண்பரை கொலை செய்த வழக்கில் 35 வயது ஆப்ரிக்கன் பிரஜைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. உம்முல் குவைனில் மிஸ்டிமெய்னர் நீதிமன்றம் கொலையாளிக்கு மரண தண்டனை விதித்தது. இருவரும் உமுல் குவைனில் அல் ஹம்ரா மாவட்டத்தில் வாடகை வீடு எடுத்து ஒரே அறையில் தங்கி வந்தனர். சொந்த நாட்டை சேர்ந்த…

மேலும்...

ரம்ஜானை முன்னிட்டு குவைத்தில் முக்கிய உணவு கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை!

குவைத் (10 மார்ச் 2022): ரம்ஜானை முன்னிட்டு குவைத்தில் உள்ள முக்கிய உணவுச் சந்தையான முபாரக் சந்தையை அதிகாரிகள் பார்வையிட்டனர். ரம்ஜான் மாதத்தில் அன்றாடப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தக அமைச்சகம் முன்பு தெரிவித்திருந்தது. இதன் ஒரு கட்டமாக குவைத்தின் பாரம்பரிய வர்த்தக மையமான முபாரக் சந்தையை அமைச்சக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கு வந்த அதிகாரிகள் குழு இறைச்சிக் கடைகளை ஆய்வு செய்து, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அதிக விலை…

மேலும்...

சவூதி பஹ்ரைன் தரைவழி பயணத்திற்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி அவசியம்!

ரியாத் (10 மார்ச் 2022): சவூதி-பஹ்ரைன் தரைவழி (காஸ்வே) பயணம் செய்ய பூஸ்டர் டோஸ் கட்டாயம் என்று காஸ்வே ஆணையம் தெரிவித்துள்ளது. அதேவேளை மூன்று மாதங்களுக்குள் இரண்டாவது டோஸ் பெற்றவர்களுக்கும், கோவிட் தடுப்பூசியில் சிறப்புச் சலுகை பெற்றவர்களுக்கும் இந்த விதிமுறையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கோவிட் கவரேஜுடன் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டைக் கொண்ட பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளும் இதிலிருந்து விலக்கு பெறுகிறார்கள். சவூதி அரேபியாவுக்குள் நுழைவதற்கு உள்துறை அமைச்சகம் புதிய சலுகைகளை அளித்துள்ள நிலையில், காஸ்வே ஆணையத்தின் உத்தரவு…

மேலும்...

கொரோனா விதிமுறைகளை திரும்பப் பெற்றது சவூதி அரேபியா!

ரியாத் (06 மார்ச் 2022): தனிமைப்படுத்தல், பிசிஆர் சோதனை உட்பட அனைத்து கோவிட் விதிமுறைகளையும் சவூதி அரேபியா திரும்பப் பெற்றது. மக்கா, மதீனாவில் உள்ள ஹராமில் தொழுகைக்காக நுழைய அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதேவேளை முகக்கவசங்கள் மற்றும் தவக்கல்னா பயன்பாடு தொடரும். இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள முக்கிய அறிவிப்புகள் ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்வோம் 1. சவூதிக்கு வருபவர்களுக்கு இனி நிறுவன தனிமைப்படுத்தல், வீட்டு தனிமைப்படுத்தல் மற்றும் PCR சான்றிதழ் தேவையில்லை….

மேலும்...

இந்தியாவில் ஹிஜாப் தடை – களமிறங்கிய குவைத் – இந்திய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்!

குவைத் (18 பிப் 2020): ஹிஜாப் விவகாரத்தில் இந்தியாவில் உள்ள முஸ்லிம் மாணவிகளுக்கு ஆதரவாக குவைத் பெண்கள் குழுக்களும் அரசியல்வாதிகளும் களமிறங்கியுள்ளனர். ஹிஜாப் தடைக்கு எதிராக இஸ்லாமிய அரசியலமைப்பு இயக்கத்தின் பெண்கள் பிரிவு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கிரீன் தீவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்தியாவில் முஸ்லிம் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் வன்முறைகள் குறித்து சர்வதேச சமூகம் மௌனம்…

மேலும்...

சவுதியில் நடந்த இந்திய குடியரசு தின கால்பந்தாட்டப் போட்டி!

ஜித்தா (6 பிப் 2022): இந்தியன் சோசியல் ஃபோரம் மேற்கு மாகாணம் தமிழ்நாடு மாநில கமிட்டி சார்பாக 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நட்பு ரீதியான கால்பந்தாட்டப் போட்டி 28-1-2022 வெள்ளி கிழமை காலை 8:30 மணியளவில் இந்தியன் சோசியல் ஃபோரம் தமிழ் நாடு மாநில கமிட்டி தலைவர் பொறியாளர் முஹம்மது முகைதீன் தலைமையில் நடைபெற்றது. இதில் யுனைட்டட் ஸ்போர்ட்ஸ் கிளப் தமிழ்நாடு அணிக்கும், இந்தியன் சோசியல் ஃபோரம் கேரள அணிக்கும் இடையே ஷரஃபிய்யா ODST ஹோட்டல்…

மேலும்...

சவூதி ஜித்தாவில் இடிக்கப்படும் 50,000 கட்டிடங்கள்!

ஜித்தா (31 ஜன 2022): சவூதி அரேபியாவின் ஜித்தாவில் சுமார் 50,000 கட்டிடங்கள் இடிக்கப்படுவதாக உள்ளூர் நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நகர்ப்புற மேம்பாடு மற்றும் அழகுபடுத்தலின் ஒரு பகுதியாக, ஜித்தாவில் உள்ள குடிசைகள் உட்பட 138 பகுதிகளில் உள்ள 50,000 கட்டிடங்களை இடிக்க முனிசிபாலிட்டி இலக்கு வைத்துள்ளது. இதில் 13 பகுதிகளில் சுமார் 11,000 கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. மீதமுள்ள சிலவற்றை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது வீடுகள், கட்டிடங்கள் மற்றும் தங்குமிடங்களை இழந்தவர்களுக்கு 68,000 தற்காலிக முகாம்கள் அமைக்கப்படும்….

மேலும்...