ஜித்தா (31 ஜன 2022): சவூதி அரேபியாவின் ஜித்தாவில் சுமார் 50,000 கட்டிடங்கள் இடிக்கப்படுவதாக உள்ளூர் நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நகர்ப்புற மேம்பாடு மற்றும் அழகுபடுத்தலின் ஒரு பகுதியாக, ஜித்தாவில் உள்ள குடிசைகள் உட்பட 138 பகுதிகளில் உள்ள 50,000 கட்டிடங்களை இடிக்க முனிசிபாலிட்டி இலக்கு வைத்துள்ளது. இதில் 13 பகுதிகளில் சுமார் 11,000 கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. மீதமுள்ள சிலவற்றை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது
வீடுகள், கட்டிடங்கள் மற்றும் தங்குமிடங்களை இழந்தவர்களுக்கு 68,000 தற்காலிக முகாம்கள் அமைக்கப்படும். கட்டிட உரிமையாளர்களுக்கு இழப்பீடு கிடைக்கும் வரை அவர்களது செலவில் அரசு தங்கும் வசதியும் அளித்துள்ளது. என ஜித்தா நகராட்சி தெரிவித்துள்ளது.
.இடிக்கப்பட்ட கட்டிடம் மற்றும் நிலங்களை இழந்த உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக ஜித்தா நகராட்சி நேற்று அறிவித்தது. இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறத் தொடங்கியுள்ளன. கட்டிடங்கள் இடிக்கப்பட்டதால் வீடற்ற 550 குடும்பங்கள் அரசு செலவில் இடம்பெயர்ந்தனர். மேலும், சொந்த வீடு அல்லது ஆவணங்கள் இல்லாத 4781 குடும்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவர்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய வீடுகள் கட்டித்தரப்படும். என்றும் ஜித்தா நகராட்சி தெரிவித்துள்ளது.
த்தா கவர்னரேட்டை உள்ளடக்கிய மெக்கா பிராந்தியத்தில், தற்போது எந்த ஆவணமும் இல்லாத குடிமக்களுக்கு அரசாங்கத்தின் கீழ் உள்ள தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் வீடுகளை வழங்கவுள்ளதாக ஜித்தா நகராட்சி தெரிவித்துள்ளது.
எனினும் கட்டிடங்கள் இடிக்கப்பட்டதால் வெளியேற்றப்பட்டவர்களுக்கு சவுதி அரசாங்கம் தங்குமிடங்களை வழங்குவதால் வாடகைகள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.