கோவேக்சின் தடுப்பூசி போட்டவர்கள் சவூதி தவக்கல்னாவில் பதிவு செய்யும் வசதி!

கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்கள் சவூதி தவக்கல்னாவில் பதிவு செய்யும் வசதி! ரியாத் (15 டிச 2021): இந்தியாவில் இருந்து கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் சவூதி சுகாதார அமைச்சகத்தின் தவக்கல்னா அப்ளிகேசனில் பதிவு செய்யலாம். இதன் மூலம் கோவாக்சின் பெற்றவர்களுக்கு தவக்கல்னா ஆப்பில் நோய் எதிர்ப்பு நிலை காட்டப்படும். சுற்றுலா (விசிட்டிங்) விசா வைத்திருப்பவர்களும் தடுப்பூசி சான்றிதழ்களுக்காக பதிவு செய்யலாம். ஏற்கனவே சவூதி அரேபியாவில் ஃபைசர், மொடெனா, ஜான்சன் & ஜான்சன் மற்றும் அஸ்ட்ரா செனிகா அல்லது…

மேலும்...

மக்கா – மதீனா ஹரமைன் ரெயில் சேவை எண்ணிக்கை அதிகரிப்பு!

ஜித்தா (13 டிச 2021): மக்கா மற்றும் மதீனாவிற்கு இடையேயான ஹரமைன் அதிவேக இரயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மக்கா மற்றும் மதீனாவிற்கு ஹரமைன் அதிவேக இரயில் சேவையில் பயணிக்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதால், தினமும் கூடுதலாக 16 சேவைகள் இயக்கப்படும் என்று இரயில் அதிகாரிகள் தெரிவித்தனர். ஹரமைன் இரயில் சேவை மக்கா, ஜித்தா, ராபிக் மற்றும் மதீனா ஆகியவற்றிற்கு உண்டு. இதற்கிடையே ஜித்தாவின் சுலைமானியா நிலையத்திலிருந்து மக்காவிற்கு மேலும் எட்டு தினசரி சேவைகளும், மதீனாவிற்கு…

மேலும்...

உலகின் முதல் காகிதமற்றதாக மாறும் துபாய் அலுவலகங்கள்!

துபாய் (12 டிச 2021): துபாயில் அரசுத் துறை முற்றிலும் காகிதமற்றது என்று துபாயின் பட்டத்து இளவரசரும் நிர்வாகக் குழுவின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அறிவித்தார். துபாயை டிஜிட்டல் நகரமாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக ஷேக் ஹம்தான் 2018 இல் காகிதமில்லா திட்டத்தை அறிவித்தார். இத்திட்டம் ஐந்து கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது. ஐந்தாவது கட்டத்தின் முடிவில், துபாயில் உள்ள 45 அரசுத் துறைகளும் காகிதமற்றவை. இதன் மூலம், இந்த…

மேலும்...

இந்தியாவில் இரண்டு கோவிட் தடுப்பூசி போட்டவர்கள் சவூதியில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளலாம்!

ரியாத் (04 டிச 2021): இந்தியாவில் இருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டு சவுதி அரேபியாவுக்கு வந்தவர்களுக்கு சவூதி அரேபியாவில் பூஸ்டர் டோஸ் போடப்பட்டு வருகிறது. சவூதியில் தடுப்பூசியைப் பெற்ற ஆறு மாதங்களுக்குப் பிறகு, பூஸ்டர் டோஸ் இப்போது பெற்றுக் கொள்ளலாம். இதற்கு செஹாத்தி செயலி மூலம் முன்பதிவு செய்யலாம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல இந்தியாவிலிருந்து இரண்டு டோஸ் கோவ்ஷீல்டுகளைப் பெற்று தடுப்பூசி சான்றிதழுக்காக சவுதி சுகாதார அமைச்சகத்தில் பதிவு செய்துள்ள அனைவரும் செஹாத்தி செயலி…

மேலும்...

ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் – லாக்டவுன் உண்டாகுமா? -சவூதி அரேபியா விளக்கம்

ரியாத் (03 டிச 2021): ஒமிக்ரான் வைரஸ் பரவல் அச்சுறுத்தல் இருந்தபோதும் லாக்டவுன் உள்ளிட்ட நடவடிக்கைகளை சவூதி அரேபியா எடுக்காது என்று அந்நாட்டு சுகாதார அமச்சகம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் எழுபத்தைந்து சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி  போட்டு முடித்துள்ளனர், எனவே கவலைப்பட எதுவும் இல்லை என சவூதி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேவேளை ஒமிக்ரான் வைரஸ் தொற்று…

மேலும்...

துபாய் மற்றும் சவூதி அரேபியாவிற்குள் நுழைந்த ஒமிக்ரான் வைரஸ்!

துபாய் (02 டிச 2021): கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரான் வைரஸ் நுழைந்ததை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் உறுதிபடுத்தியுள்ளன. கொரோனாவைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் தற்போது ஒமிக்ரான் என்ற சொல்லைக் கேட்டாலே அச்சமடைந்து வருகின்றன. தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை மற்றும் வீரியமிக்க வைரசுக்கு ஒமிக்ரான் என்று விஞ்ஞானிகள் பெயர் வைத்துள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் இது அதி வேகமாக பரவி வரும் நிலையில், சவூதி அரேபியா மற்றும்…

மேலும்...

சவூதி அரேபியாவின் புதிய உத்தரவு இந்தியர்களுக்கும் பொருந்தும்!

ரியாத் (30 நவ 2021): சவூதி அரேபியாவில் இருந்து விடுமுறையில் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்ற வெளிநாட்டினரின் விசா மற்றும் குடியுரிமை அட்டை (இக்காமா) காலாவதி காலம் வரும் ஜனவரி 31, 2022 வரை இலவசமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இது இந்தியர்களுக்கும் பொருந்தும். ஏற்கனவே அறிவித்தபடி நவம்பர் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் விசாக்கள் ஜனவரி 31, 2022 வரை நீட்டிக்கப்படும். சவூதிக்கு வர முடியாமல் நாட்டில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்களுக்கு இந்த முடிவு பயனுள்ளதாக இருக்கும். சவூதி…

மேலும்...

குவைத்தில் பல்வேறு நாடுகளுக்கு மீண்டும் விமான தடை!

குவைத் (28 நவ 2021): குவைத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து நுழைய தடை விதிக்கும் வகையில் முன்பு நடைமுறையில் இருந்த சிவப்பு பட்டியல் முறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் புதிய வேரியன்ட் (ஒமிக்ரான்) பற்றிய அறிக்கைகளைத் தொடர்ந்து ஒன்பது ஆப்பிரிக்க நாடுகள் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, மொசாம்பிக், லெசோதோ, ஸ்வதானி, ஜாம்பியா மற்றும் மலாவி ஆகிய நாடுகளுக்கு விமானப் போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது. இந்த நாடுகளில் இருந்து வரும்…

மேலும்...

சவூதி அரேபியாவிலிருந்து விடுமுறையில் சென்ற வெளிநாட்டவர்களின் இக்காமா மற்றும் விசா காலாவதி காலம் மீண்டும் இலவச நீட்டிப்பு!

ரியாத் (28 நவ 2021): சவூதி அரேபியாவில் இருந்து விடுமுறையில் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்ற வெளிநாட்டினரின் விசா மற்றும் இக்காமா காலாவதி காலம் வரும் ஜனவரி 2022 31 ஆம் தேதி வரை இலவசமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி நவம்பர் 31 ஆம் தேதி நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் விசாக்கள் ஜனவரி 31, 2022 வரை நீட்டிக்கப்படும். சவூதிக்கு வர முடியாமல் நாட்டில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்களுக்கு இந்த முடிவு பயனுள்ளதாக இருக்கும். சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான்…

மேலும்...

தீவிர இந்துத்வாவாதி சுதிர் சவுத்ரி துபாய் வருவதை நான் அனுமதிக்க மாட்டேன் – துபாய் இளவரசி கடும் கண்டனம்!

துபாய் (25 நவ 2021): கடும் எதிர்ப்பிற்கிடையே அபுதாபி நிகழ்ச்சியில் தீவிர இந்துத்வாவாதி சுதிர் சவுத்ரி கலந்துகொள்ளவுள்ள நிலையில் துபாய் இளவரசி ஹிந்த் பின்த் ஃபைசல் அல் காசிமி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். வலதுசாரி இந்து அறிவிப்பாளரான சுதிர் சௌத்ரி, இந்தியாவில் உள்ள 200 மில்லியன் முஸ்லீம்களை இலக்காகக் கொண்டு பல கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவரது பல பிரைம் டைம் நிகழ்ச்சிகள் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அபுதாபியில்…

மேலும்...