துபாய் (02 டிச 2021): கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரான் வைரஸ் நுழைந்ததை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் உறுதிபடுத்தியுள்ளன.
கொரோனாவைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் தற்போது ஒமிக்ரான் என்ற சொல்லைக் கேட்டாலே அச்சமடைந்து வருகின்றன. தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை மற்றும் வீரியமிக்க வைரசுக்கு ஒமிக்ரான் என்று விஞ்ஞானிகள் பெயர் வைத்துள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் இது அதி வேகமாக பரவி வரும் நிலையில், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பாதித்த முதல் வழக்கு பதிவாகியுள்ளது. இதனை இரு நாடுகளும் புதன்கிழமை உறுதிபடுத்தியுள்ளது.