விடுப்பில் இந்தியா சென்று சவூதி வரமுடியாமல் உள்ளவர்களின் விசாக்காலத்தை செப்டம்பர் 31 வரை நீட்டித்து உத்தரவு!

ரியாத் (17 ஆக 2021): சவூதியிலிருந்து விடுப்பில் ஊர் சென்று திரும்ப வரமுடியாமல் உள்ளவர்களின் விசாக்காலம் செப்டம்பர் 31 வரை புதுப்பிக்கப்படுவதாக சவூதி பாஸ்போர்ட் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் காலாவதியானவர்களின் குடியுரிமை அட்டை, (இக்காமா) காலமும் செப்டம்பர் 31 வரை புதுப்பிக்கப்படுவதாக சவூதி பாஸ்போர்ட் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை அடுத்து, சவுதி அரேபியா இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடி விமானங்களை தடை செய்துள்ள நிலையில் அவர்களுக்கு இந்த அறிவிப்பு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, சவுதி…

மேலும்...

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு கத்தார் அரசு அதிரடி உத்தரவு!

தோஹா (14 ஆக 2021): அரசு அனுமதியின்றி கல்விக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டாம் என்று கத்தார் கல்வி அமைச்சகம் தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் தனியார் பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகள் வசூலிக்கும் கல்விக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களை உரிமத் துறை கடுமையாக கண்காணித்து வருவதாக கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமைச்சகத்தின் முன் அனுமதி இல்லாமல் கல்வி குறித்த எந்த கட்டணமும் உயர்த்தப்படக் கூடாது. அவ்வாறு அனுமதியின்றி கட்டங்களை உயர்த்துவது சட்டவிரோதமாக கருதப்படும்…

மேலும்...

சவூதி விசிட் விசா செல்லுபடி காலம் நீட்டிப்பு!

ரியாத் (14 ஆக 2021): சவுதிக்கு வரும் வெளிநாட்டினரின் காலாவதியான விசிட் விசா செல்லுபடி காலம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவுக்கான நேரடி விமானங்கள் மீண்டும் தொடங்கப்படாத நாடுகளில் இருந்து பலர் சவூதி திரும்ப முடியாமல் உள்ளனர். இந்நிலையில் சிலருக்கு விசிட் விசா உள்ளிட்ட விசாக்கள் காலாவதியாகியுள்ள நிலையில் அவர்களின் விசா செல்லுபடி காலம் வரும் செப்டம்பர் 30 வரை இலவசமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு சவுதி வருகைக்கு தற்காலிக தட்டி விதிக்கப்பட்டுள்ள பட்டியலில்…

மேலும்...

கொரோனா தடுப்பூசி போடுவதை தவிர்க்க மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது!

ரியாத் (13 ஆக 2021): சவூதியில் ‘தவக்கல்னா’ அப்ளிகேஷனை தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். சவூதியில் ‘தவக்கல்னா’ என்ற அப்ளிகேஷன் அனைவருக்கும் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. அதன் மூலம் அரசு சார்ந்த பல சொந்த விவரங்கள் அந்த அப்ளிகேஷனில் உள்ளடக்கியிருக்கும். கொரோனா பாதித்தவர்கள், கொரோனா தடுப்பூசி போட்டது உறுதி செய்யப்பட்டவை அனைத்தும் அதில் பதிவாகியிருக்கும். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடாமல் இரு டோஸ் தடுப்பூசி போட்டதுபோல் மோசடி செய்ய உதவியதாக சிரியாவை சேர்ந்த இருவரையும்,…

மேலும்...

காலாவதியான துபாய் விசா காலம் நீட்டிப்பு!

துபாய் (12 ஆக 2021): ஐக்கிய அரபு எமிரேட்சீல், வெளிநாட்டவர்களின் காலாவதியான விசா காலம் நவம்பர் 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விசா காலாவதியாகி வெளிநாடுகளில் வசிப்பவர்கள் நவம்பர் 9 க்குள் துபாய் திரும்ப வேண்டும் என்று விசா சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல எமிரேட்ஸ் இணையதளத்தில் உள்ளபடி, சுற்றுலா விசா வைத்திருப்பவர்களும் துபாய்க்கு வரலாம். அதேபோல வேலை மற்றும் குடியுரிமை விசாக்களுக்கு பொருந்தும் நிபந்தனைகள் சுற்றுலா விசாக்களுக்கும் பொருந்தும் என்று எமிரேட்ஸ் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்...

மீண்டு வரும் சவூதி அரேபியா!

ரியாத் (12 ஆக 2021): சவுதி அரேபியாவில் கடந்த மூன்று நாட்களில் கொரோனா பாதிப்பிலிருந்து அதிக அளவில் குணமடைந்து வருகின்றனர். உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா பல வகையான மரபு மாற்றங்களால் அச்சுறுத்தி வருகிறது. எனினும் தொடக்கத்திலிருந்தே சவுதி அரேபியாவில் ஓரளவுக்கு கட்டுக்குள் இருக்கும் கொரோனா பாதிப்பு, கடந்த மூன்று தினங்களாக பெருமளவில் குறைந்து வருகிறது. மேலும் நேற்று மட்டும் கொரோனா பாதித்து மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது நேற்று மட்டும் 1389 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா…

மேலும்...

சர்வதேச அளவில் முதலிடத்தைப் பிடித்த கத்தார்!

தோஹா (10 ஆக 2021): உலகின் மிகச்சிறந்த சர்வதேச விமான நிலையங்களில் கத்தாரின் ஹாமத் சர்வதேச விமான நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்து,  2021-ஆம் ஆண்டுக்கான புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது ஸ்கை ட்ராக்ஸ் நிறுவனம். அதில் கத்தாரின் ஹாமத் சர்வதேச விமான நிலையம் உலகின் சிறந்த விமான நிலையம் என்ற பெயரை எடுத்து முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டில் கத்தார்…

மேலும்...

வெளிநாட்டிலிருந்து வரும் உம்ரா யாத்ரீகர்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் மக்காவிற்கு வர அனுமதி!

மக்கா (10 ஆக 2021): வெளிநாடுகளில் இருந்து வரும் உம்ரா யாத்ரீகர்களுக்கு இன்று முதல் மக்காவில் உம்ரா செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக வெளிநாட்டு உம்ரா யாத்ரீகர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் வெளிநாட்டு உம்ரா யாத்ரீகர்கள் மக்காவிற்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். சவூதி அரேபியா அனுமதித்துள்ள கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் பெற்றவர்கள் ஆன் லைன் மூலம் அனுமதி பெற்று உரிய நடைமுறைகளை பின்பபற்றி உம்ராவிற்கு வரலாம். ஆனால் 12…

மேலும்...

இனி 2 ஜி சேவைக்கு குட் பை!

துபாய் (10 ஆக 2021): ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த ஆண்டு டிசம்பரில் 2 ஜி சேவை முற்றிலும் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகெமெங்கும் 5 ஜி சேவை முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஜூன் மாதம் 2 ஜி வசதி கொண்ட தொலைபேசிகளின் விற்பனையை தடை செய்யப்படும் என்றும், டிசம்பர் 2022 இல் 2 ஜி சேவை முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. 2 ஜி…

மேலும்...

கத்தாருக்கு வந்த இந்திய கடற்படைக் கப்பல்!

தோஹா (10 ஆக 2021): இந்திய கடற்படையின் கப்பல் Trikand (ஐஎன்எஸ் திரிகாந்த்) கத்தார் தலைநகர் தோஹாவை வந்தடைந்தது. ஐந்து நாள் கடற்படைப் பயிற்சிக்காக இக் கப்பல் தோஹாவிற்கு வந்திருக்கிறது. கேப்டன் ஹரீஷ் பகுகுனா தலைமையில் வந்திருக்கும் இந்தக் கப்பலை, கத்தார் கடற்படையின் பிரதிநிதிகள் வரவேற்றனர். இதில் இரு நாட்டு கடற்படைகளின் பங்கேற்புடன் கூட்டுப் பயிற்சி நடைபெறும். இந்தப் பயிற்சியில் விமானப் பாதுகாப்பு, கடல்சார் கண்காணிப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் உள்ளடங்கி இருக்கும். துறைமுகத்தில்…

மேலும்...