மக்கா (10 ஆக 2021): வெளிநாடுகளில் இருந்து வரும் உம்ரா யாத்ரீகர்களுக்கு இன்று முதல் மக்காவில் உம்ரா செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக வெளிநாட்டு உம்ரா யாத்ரீகர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் வெளிநாட்டு உம்ரா யாத்ரீகர்கள் மக்காவிற்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சவூதி அரேபியா அனுமதித்துள்ள கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் பெற்றவர்கள் ஆன் லைன் மூலம் அனுமதி பெற்று உரிய நடைமுறைகளை பின்பபற்றி உம்ராவிற்கு வரலாம். ஆனால் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமியரும் உம்ராவிற்கு அனுமதி இல்லை.
ஏற்கனவே உள் நாட்டில் வசிப்பவர்கள் உம்ராவிற்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஹஜ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஜூலை 25 முதல் உள் நாட்டு யாத்ரீகர்களுக்கு மீண்டும் உம்ரா அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் வெளிநாட்டு உம்ரா யாத்ரீகர்கள் செவ்வாய்க்கிழமை முதல் அனுமதிக்கப்படுகின்றனர். இதுவரை, 20,000 யாத்ரீகர்கள் தினமும் உம்ரா செய்து வந்தனர், ஆனால் இப்போது 60,000 பேர் தினமும் உம்ரா செய்ய முடியும் என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனினும் இந்தியா உட்பட பயணம் தடைசெய்யப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இப்போது உம்ராவில் நேரடியாக கலந்து கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.