துபாய் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

துபாய் (04 ஆக 2021): ஹிஜ்ரா (முஹர்ரம் 1) புத்தாண்டை முன்னிட்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “(முஹர்ரம் 1) புத்தாண்டை முன்னிட்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி பொது விடுமுறையாகும். இது பொது மற்றும் தனியார் துறைகளுக்கும் பொருந்தும். தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஒரே நாளில் ஊதியத்துடன் கூடிய விடுப்பை அனுமதிக்க வேண்டும்.” என்று அமைச்சகம்…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு சவூதி வரும் இந்தியர்களுக்கு உதவலாம்!

துபாய் (04 ஆக 2021): ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான தடை நீக்கம் சவூதி வர காத்திருக்கும் இந்தியர்களுக்கு உதவக்கூடும். இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை ஐக்கிய அரபு அமீரகம் நேற்று நீக்கி உத்தரவிட்டது. இதனால் இந்தியாவிலிருந்து துபாய் வராமல் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். துபாயின் இந்த அறிவிப்பு சவூதி வரும் இந்தியர்களுக்கு உதவக்கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஏற்கனவே கத்தர் வழியாக வரும் இந்தியர்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு ஹோட்டல் கிடைக்காததால் பலர் சிக்கித்தவித்துள்ளனர்….

மேலும்...

இந்தியாவிலிருந்து துபாய் செல்ல விமானங்களுக்கு டிக்கெட் புக்கிங் தொடக்கம்!

துபாய் (03 ஆக 2021): இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை ஐக்கிய அரபு அமீரகம் நீக்கியுள்ள நிலையில், விமான நிறுவனங்கள் ஆன்லைன் புக்கிங்கை தொடங்கியுள்ளன. கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக விமானப் பயணத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்திருந்தது. இத் தடையை நீக்கியுள்ள அமீரகம், இரண்டு முறை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை எடுத்துக் கொண்ட இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்புவதற்கான விசா வைத்திருப்பவர்கள் துபாய்க்கு திரும்பலாம் என அறிவிக்கப்…

மேலும்...

சுற்றுலா பயணிகளுக்கு ஒரு வருட மல்டிபிள் விசா – சவூதி அரேபியா அறிவிப்பு!

ரியாத் (03 ஆக 2021): உலகின் 49 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு வருட மல்டிபிள் விசாவை அறிமுகப்படுத்துகிறது சவூதி அரேபியா. ஆகஸ்ட் 1 ஆம் தேதி நிலவரப்படி, சவுதி அரேபியா உலகம் முழுவதிலுமிருந்து 49 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சவூதி வருவதற்கு அனுமதி வழங்கியது. அதன்படி ஒரு வருட காலத்திற்கு பல நுழைவு மின்னணு (multiple-entry electronic visa )விசாவைப் பெறுவதற்கான அனைத்து நடைமுறைகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன, சுற்றுலாப் பயணிகள் 90 நாட்கள் தொடர்ந்து சவூதியில்…

மேலும்...

துபாய், இந்தியா இடையேயான பயணத் தடை நீக்கம்!

துபாய் (03 ஆக 2021): இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை ஐக்கிய அரபு அமீரகம் நீக்குகிறது. கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக விமானப் பயணத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்திருந்தது. இந்த தடையை நீக்கியுள்ள அமீரகம் , இரண்டு முறை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை எடுத்துக் கொண்ட ஐக்கிய அரபு அமீரக விசா வைத்திருப்பவர்கள் துபாய்க்கு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5 முதல் இது அமலுக்கு வருகிறது. கோவிட் பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து இந்தியா,…

மேலும்...

குவைத்தில் திடீர் நிலநடுக்கம்!

குவைத் (02 ஆக 2021): வளைகுடா நாடான குவைத்தில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. குவைத்தின் மனகிஷ்(Al-Manaqeesh) பகுதியில் திங்கள் கிழமை காலை 11:31 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில், 4.5 ஆக பதிவாகியுள்ளது. குவைத் அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் நில அதிர்வு கண்காணிப்பு பிரிவின் மேற்பார்வையாளர் அப்துல்லா அல் அன்சி கூறுகையில், உள்ளூர் நேரப்படி காலை 11:31 மணிக்கு பதிவான இந்த நிலநடுக்கம் மனகிஷ் பகுதியின் தரைமட்டத்திலிருந்து 8 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும்,…

மேலும்...

கத்தார் இந்தியா இடையே கோஃபார்ஸ்ட் புதிய பட்ஜெட் விமான சேவை!

தோஹா (02 ஆக் 2021): கத்தார் –  இந்தியா இடையே மற்றும் ஒரு விமான சேவையாக கோஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ் விமான சேவை தொடங்கவுள்ளது. இந்தியாவின் பட்ஜெட் விமானமான நிறுவனமான கோ ஏர் ஏர்லைன்ஸ் அதன் பெயரை கோஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ் என மாற்றியுள்ளது. இது கொச்சி தோஹா இடையே வாரம் இருமுறை (வியாழன் மற்றும் சனிக்கிழமை) தனது விமான சேவையை நடத்தும். அதேபோல கண்ணுர் தோஹா இடையே வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விமான சேவையை நடத்தும். மேலும் தோஹாவிலிருந்து…

மேலும்...

கோவிட் தடுப்பூசி பெறாதவர்களுக்கு அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்!

ரியாத் (02 ஆக 2021): சவூதியில் கோவிட் தடுப்பூசி பெறாதவர்கள் ஆகஸ்ட் 1 முதல் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் மேலும் சில கட்டுப்பாடுகளை சவூதி சுகாதரத்துறை விதித்துள்ளது. குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் கோவிட் தடுப்பூசியை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் இல்லையெனில் அவர்கள் வேலைக்கு வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேலை ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை வீட்டிலிருந்தபடி பணிபுரியலாம். அதற்குள் தடுப்பூசி பெறவில்லையெனில் கட்டாய விடுப்பு அளிக்கப்படும்…

மேலும்...

பயணத் தடை செய்யப்பட்ட நாடுகளை தவிர மற்ற வெளிநாட்டு உம்ரா யத்ரீகர்களுக்கு சவூதி அரேபியா அனுமதி!

ரியாத் (31 ஜுலை 2021): கோவிட் பரவல் காரணமாக பயணத் தடை செய்யப்பட்ட நாடுகளை தவிர மற்ற நாடுகளிலிருந்து உம்ரா யாத்ரீகர்கள் வருவதற்கு சவூதி அரேபியா அனுமதி வழங்கியுள்ளது. தற்போது, ​​இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, எகிப்து, துருக்கி, அர்ஜென்டினா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எத்தியோப்பியா, வியட்நாம், ஆப்கானிஸ்தான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கு சவூதி அரேபியா விமான தடை விதித்துள்ளது. இந்த நாடுகளில் கொரோனா வைரஸ் மற்றும் அதன் மாறுபாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால்…

மேலும்...

சவூதி அரேபியாவில் கொரோனா காரணமாக இந்தியாவின் 6 மாத கர்ப்பிணிப் பெண் மரணம்!

கத்தீப் (31 ஜுலை 2021): சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவை சேர்ந்த 6 மாத கர்ப்பிணிப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கேரளா மாநிலம் எர்ணாகுளம் அடுத்த ஆலுவா பகுதியை சேர்ந்த விஷ்ணு என்பவரின் மனைவி காதா(வயது-27) ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அவர் தாமாம் அருகிலுள்ள கத்தீப் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காதாவின் உடல்நிலை மோசமடைந்ததால், குழந்தையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை…

மேலும்...