துபாய் (04 ஆக 2021): ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான தடை நீக்கம் சவூதி வர காத்திருக்கும் இந்தியர்களுக்கு உதவக்கூடும்.
இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை ஐக்கிய அரபு அமீரகம் நேற்று நீக்கி உத்தரவிட்டது. இதனால் இந்தியாவிலிருந்து துபாய் வராமல் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
துபாயின் இந்த அறிவிப்பு சவூதி வரும் இந்தியர்களுக்கு உதவக்கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் ஏற்கனவே கத்தர் வழியாக வரும் இந்தியர்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு ஹோட்டல் கிடைக்காததால் பலர் சிக்கித்தவித்துள்ளனர். மேலும் ஹோட்டல் முன்பதிவு கிடைக்காமல் பயணச்செலவும் அதிகரிக்கிறது. அதேவேளை துபாய் வழியாக வரும்போது இந்தியர்களுக்கு சிரமம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.