வழிபாட்டுத் தலங்கள் மறு உத்தரவு வரும் வரை திறக்கப்பட மாட்டாது – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை (31 மே 2020): கொரோனா பரவலை தடுக்க, தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீடிநகாணும் செயல்பாடுகளுக்கான தடைகள் மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து நீடிக்கும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு மறு உத்தரவு வரும் வரை தடை நீடிக்கும். நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலாத்தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை…

மேலும்...

கோவையில் கோவிலில் இறைச்சி வீசிய ஹரி ராம்பிரகாஷ் குறித்து திடுக்கிடும் தகவல்!

கோவை (31 மே 2020): கோவையில் கோவிலில் இறைச்சியை வீசிய ஹரி என்பவருக்கு மனநோய் என்பதாக குற்றவாளி தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர். கோயம்புத்தூரில் உள்ள வேணுகோபால கிருஷ்ணசாமி கோயில் மற்றும் ஸ்ரீ ராகவேந்திர கோவிலில் இறைச்சி வீசிய நபர் கைது செய்யப்பட்டார். இவரை கோயம்புத்தூர் நகர போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் கோவையில் உள்ள கவுந்தம்பாளையத்தைச் சேர்ந்த எஸ்.ஹரி ராம்பிரகாஷ் (48) என போலீசாரால் அடையாளம் காணப்பட்டார். சி.சி.டி.வி காட்சிகளை வைத்து கோயில்களுக்கு அருகே பைக்…

மேலும்...

ஜூன் 1 ஆம் தேதி முதல் சிறப்பு ரெயில்கள் அட்டவணை!

சென்னை (31 மே 2020): கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு காரணமாக நாடுமுழுவதும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது 01.6.2020 முதல் தமிழகத்தில் ரயில் போக்குவரத்தை துவக்குவதற்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. சிறப்பு ரயில்களின் கால அட்டவணை வண்டி எண் 02636 மதுரை – விழுப்புரம் சிறப்பு ரயில் மதுரையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.05 மணிக்கு விழுப்புரம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் வண்டி எண் 02635 விழுப்புரம் –…

மேலும்...

தமிழறிஞர் அதிரை அஹமது மரணம் – பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா இரங்கல்!

சென்னை (30 மே 2020): தமிழறிஞர், தமிழ் மாமணி அதிரை அஹமது இன்று காலமானார். அவருக்கு பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் மாநில தலைவர் எம்.முஹம்மது சேக் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிறந்த எழுத்தாளரும் மிகச்சிறந்த பண்பாளருமான அதிரை அஹமது அவர்களின் மரணச் செய்தி மிக்க வேதனையளிகின்றது. மொழிபெயர்ப்பு புத்தகங்கள் முதற்கொண்டு பல்வேறு புத்தகங்களை தமிழ் மக்களுக்கு தந்துள்ளார். நபி (ஸல்) வரலாறு, நல்ல தமிழ் எழுதுவோம், அண்ணலார் கற்றுத்…

மேலும்...

லாக்டவுன் மற்றும் ரம்ஜான் காலங்களில் ஜித்தா முத்தமிழ் சங்கம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகளின் தொடர் சேவை!

தஞ்சாவூர் (30 மே 2020): ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் கடந்த ஒரு மாதமாக தஞ்சைப் பகுதிகளில் ரமலான் மாத நோன்புகாலத்தில் ஸஹர் எனும் அதிகாலை உணவினை தினமும் சுமார் 400 பேருக்கு தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் சங்க நட்புகளோடும், மக்கா மதினா ஈமான் அறக்கட்டளை, இயற்கை அறக்கட்டளை நிர்வாகிகளோடும் இணைந்து கிங்ஸ் கேட்டரிங்ஸ் மூலம் தரமாக சமைத்தும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அனுமதியோடு பெரும்பாலும் அவரவர் இல்லங்கள் சென்றும், சமூக இடைவெளியைக் கடைபிடித்தும் வழங்கி வந்தது. அப்போது…

மேலும்...

எழுத்தாளர், தமிழறிஞர் அதிரை அஹமது மரணம் – ஜவாஹிருல்லா இரங்கல்!

சென்னை (30 மே 2020): எழுத்தாளரும் தமிழறிஞருமான தமிழ் மாமணி அதிரை அஹமது அவர்கள் இன்று காலை காலமானார்கள். அவர்கள் மறைவுக்கு மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த சிறந்த எழுத்தாளர், தமிழறிஞர் அதிரை அஹ்மது அவர்கள் இன்று மரணமடைந்தார்கள் என்ற செய்தி கடும் துயரத்தை அளித்ததது. தலைசிறந்த தமிழறிஞராகத் திகழ்ந்த அஹ்மது அவர்கள் வேலூர் பாக்கியத்துஸ் சாலிஹாத் அரபிக்…

மேலும்...

அப்பாவின் மொபைலில் ஆபாச படம் – சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

திருச்சி (30 மே 2020): திருச்சி அருகே அப்பாவின் மொபைல் போனில் உள்ள ஆபாச படம் 14 வயது சிறுவனை கொலைகாரனாக்கியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் ச் சேர்ந்த ராஜாங்கம் – லலிதா தம்பதிக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள் உள்ளனர். அதில் மூன்றாவது மகள் பெயர் கண்மணி ( மாற்று பெயர் ). கண்மணி அப்பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்மணி தனது வீட்டு…

மேலும்...

தஞ்சை ஆட்சியருடன் திமுக மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு!

தஞ்சை (29 மே 2020): திமுகவின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் கீழ் உதவிய பொதுமக்கள் குறித்த விவரங்களை தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவை சந்தித்து திமுக மாவட்ட நிர்வாகிகள் அளித்தனர். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசே செய்துவிட்டதாகவும், தி.மு.க பொய் பிரச்சாரம் செய்வதாகவும், அ.தி.மு.க. அரசின் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேசியிருந்தார். இந்நிலையில் திமுக தலைவர் திரு.ஸ்டாலினின் “ஒன்றிணைவோம் வா” உதவி கோரும் எண்ணிற்கு, வந்த அழைப்பின் படி தஞ்சை மாவட்டத்தில் உதவி கோரிய…

மேலும்...

அமைச்சர் செல்லூர் ராஜுவின் ஒரே வார்த்தை – தமிழகமெங்கும் பறக்கும் போஸ்டர்!

மதுரை (29 மே 2020): கொரோனா பாதித்தவர்களுக்கு என் வீட்டை விற்று செலவழிப்பேன் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறிய நிலையில் அவரது ஆதரவாளர்கள் அதை போஸ்டராக அடித்து ஒட்டி வருகின்றனர். கொரோனாவை ஒட்டி ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடந்த 27ம் தேதி மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, பொதுமக்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவிகளை நேரடியாக வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ‘‘மதுரை மக்களுக்காக எனது…

மேலும்...

தீபா தீபக் ஆகியோரே ஜெயலலிதாவின் நேரடி வாரிசு – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சென்னை (29 மே 2020): தீபா, தீபக் ஆகியோரை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் உள்பட சுமார் ரூ. 900 கோடி மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுகவைச் சேர்ந்த புகழேந்திர கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா, அவரது தம்பி…

மேலும்...