கொரோனாவுக்கு தமிழகத்தில் மூன்றாவது பலி!

தேனி (04 ஏப் 2020): தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மூன்றாவது உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் கொரோனா பாதித்தவர்கள் இந்தியாவில் 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை 411 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2 பேர் பலியாகியிருந்தனர். இந்நிலையில், பலியானோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. “தேனியைச் சேர்ந்த கரோனா வைரஸ் பாதிப்பு நபரின்…

மேலும்...

கொரோனா வைரஸ்: கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை!

திருநெல்வேலி (04 ஏப் 2020): மேலப்பாளையத்தில் கொரோனா பரவாமல் தடுக்க அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர், காவல் துறை அதிகாரிகள், மாநகராட்சி, சுகாதார துறை அதிகாரிக உடன், ஜமாத்துல் உலமா சபை தலைவர் பி. ஏ. காஜா மொய்னுதீன் அவர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து அமைப்புகள், அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் மேலப்பாளையத்தின் தற்போதைய பிரச்சினைகள் மற்றும் நெருக்கடி மற்றும் அனைத்து அடிப்படை தேவைகள் குறித்தும் கூட்டத்தில்…

மேலும்...

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒரு மரணம்!

விழுப்புரம் (04 ஏப் 2020): தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்காக இரண்டாவதாக ஒருவர் பலியாகியுள்ளார். விழுப்புரம் சிங்காரத்தோப்பைச் சேர்ந்த 51 வயது ஆண் கொரோனா தொற்று காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலையில் அவர் உயிரிழந்தார். மேலும் பலியானவர் டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸ் மாநாட்டிற்கு சென்று திரும்பியவர் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே, மதுரையைச்…

மேலும்...

கொரோனாவை விட கொடியது மத வெறுப்பு பிரச்சாரம் – திருமாவளவன் பொளேர்!

சென்னை (03 ஏப் 2020): கொரோனா வைரஸை விட கொடியது மத வெறுப்பூட்டும் பிரச்சாரம் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தப்லீக் ஜமாத் அமைப்பின் சாா்பில் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த மாநாட்டில் பங்கேற்றவா்கள் தாமே முன்வந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். தனிமைப்படுத்திக் கொள்ளவும் வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதையடுத்து அந்த மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு…

மேலும்...

மதத்தலைவர்களுடன் தலைமை செயலர் அவசரக் கூட்டம்!

சென்னை (03 ஏப் 2020): சென்னை தலைமை செயலர் அனைத்து மதத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இன்று (03/04/2020) மாலை 03.00 மணிக்கு அனைத்து மத தலைவர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார்.கரோனா விவகாரத்தில் மதச்சாயம் பூசப்படுவதைத் தடுக்கும் நோக்கில் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்துகிறார். இதனிடையே மாவட்டங்களில் மத தலைவர்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சந்தித்து ஆலோசனை செய்யவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும்...

நாடாளுமன்றம், சட்டமன்றம் கூட்டியவர்கள் மீது வழக்கு போடுவீர்களா?: ஆளூர் ஷாநவாஸ் சரமாரி கேள்வி!

சென்னை (02 ஏப் 2020): கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் முன்பு கூடிய நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றை கூட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா? என்று ஆளுர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது.47 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா அதிக அளவில் பரவி வருகின்றது. இந்தியாவில் 50 க்கும்…

மேலும்...

ஈஷா யோகா மையத்தில் கொரோனா வைரஸ் காரணமாக தனிமை படுத்தப் பட்ட 150 பேர் – வெளிவராத உண்மைகள்!

கோவை (02 ஏப் 2020): கோவை ஈஷா யோகா மையத்தில் 150 பேர் தனிமை படுத்தப் பட்டுள்ள விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் பல லட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை இந்தியாவிலும் 2 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. தமிழகத்திலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. இந்தியா முழுவதும் கொரோனா உண்மையில் பரவ காரணம் என்ன? என்பதை கவனத்தில் கொள்ளாத அரசும் ஊடகங்களும் தேவையில்லாத தகவல்களை பரப்பி…

மேலும்...

ஒரு சூழலிலும் இந்திய சட்டத்தை மீறவில்லை – தப்லீக் ஜமாத் பிரமுகர் விளக்கம்!

கோவை (02 ஏப் 2020): டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸ் தப்லீக் ஜமாத் பிரமுகர் அங்கு நடந்த சூழல் குறித்து விளக்கம் அளித்துள்ளார். உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது உலகின் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உயிர் பலியையும், பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவ ஆரம்பித்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பு 2000 ஐ தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இது இப்படியிருக்க இந்தியாவில் கொரோனா பரவ…

மேலும்...

ஊரடங்கு நேரத்தில் ஆதரவற்றோருக்கு இலவச உணவு வழங்கும் ஓட்டல் உரிமையாளர் சக்தி விக்னேஷ்!

ஈரோடு (01 ஏப் 2020): கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக, மாநிலம் முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் உள்ள பிரபலமான கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டு, அவற்றில் நடைமுறையில் உள்ள அன்னதானத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஆதரவற்றோர் ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாமல் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் ஆதரவற்றோருக்கு இரண்டு வேளை இலவசமாக உணவு அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் இடையான்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் சக்தி விக்னேஷ்….

மேலும்...

இலவச ரேஷன் பொருட்கள் வழங்கல் :ஏப்ரல் 2 முதல் வீடுவாரியாக டோக்கன் வழங்கப்படும்!

சென்னை (01 ஏப் 2020): தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ரூ.1000 ரொக்கத்துடன் ஏப்ரல் மாதத்துக்கான பொருள்களை இலவசமாக வழங்கும் திட்டம் வியாழக்கிழமை (ஏப்ரல் 2) தொடங்குகிறது. தமிழக அரசு அரிவித்துள்ள இந்தத் திட்டம் வியாழக்கிழமை (ஏப்ரல் 2) முதல் நடைமுறைக்கு வருகிறது. நாளொன்றுக்கு சுமாா் 100 குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரா்களுக்கு வீடு வாரியாக டோக்கன் வழங்கப்படும், சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் நியாய விலைக் கடைகளுக்குச் சென்று…

மேலும்...