மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் – செந்தில் பாலாஜி!

சென்னை (27 நவ 2022): மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஏதுவாக நாளை மறுநாள் முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மின்கட்டணம் செலுத்தும்போது ஏற்படும் சிரமங்களை தவிர்க்க, தமிழகத்தில் உள்ள அனைத்து மின் அலுவலங்களிலும் நாளை மறுநாள் முதல் டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம்களை நடத்தப்படும் என கூறியுள்ளார். பண்டிகை தினங்கள் தவிர்த்து, ஞாயிற்றுகிழமை உட்பட அனைத்து…

மேலும்...

தனது வீட்டுக்கு தானே வெடிகுண்டு வீசிய இந்து முன்னணி நிர்வாகி கைது!

கும்பகோணம் (22 நவ 2022): தனது வீட்டுக்கு தானே வெடிகுண்டு வீசிய இந்து முன்னணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். கும்பகோணம், மேலக்காவேரி, காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சக்கரபாணி (38) கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மாலதி (37) மகன் இனியன் (11). சக்கரபாணி இந்து முன்னணி மாநகர செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் சக்கரபாணி மனைவி மற்றும் மகனுடன் வீட்டில் இருந்துள்ளார். அவருடைய வீட்டு வாசலில் வீசப்பட்ட கண்ணாடி பாட்டில் உடைந்து சிதறி…

மேலும்...

தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை (19 நவ 2022): தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,” தென்கிழக்கு கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்பொழுது வலு பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து…

மேலும்...

நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்க புதிய திட்டம்!

சென்னை (18 நவ 2022): நியாய விலை கடைகளில் கருவிழி அடையாளம் மூலம் பொருட்கள் வழங்கும் திட்டம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் 69-வது இந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு, 1,262 பயனாளிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி கடனுதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ”தமிழகத்தில் இனி அமைக்கப்படும் நியாய விலைக்கடைகளில் கட்டாயம் கழிவறை அமைக்கப்படும் என்றார். நியாய விலை கடைக்கு வருவோர்…

மேலும்...

சென்னை மைசூர் வந்தேபாரத் ரெயில் மீது கன்றுகுட்டி மோதி ரெயில் பழுது!

சென்னை (18 நவ 2022): மைசூரு- பெங்களூரு-சென்னை வந்தே பாரத் ரயில் அரக்கோணம் அருகே கன்றுக்குட்டி மீது மோதியதில் பழுதடைந்தது. இந்த விபத்தில் கன்றுக்குட்டி உயிரிழந்தது. விபத்து ஏற்பட்ட போது ரயில் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. இதனால் இரண்டு நிமிடம் நிறுத்தப்பட்ட ரயில், மீண்டும் சென்னைக்கு பயணத்தை துவங்கியது. இதுகுறித்து தென்னக ரயில்வேயின் சென்னை கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஏ ஏழுமலை கூறுகையில் “கன்றுக்குட்டியின் உரிமையாளரைக் கண்டுபிடித்து வழக்குப் பதிவு செய்து…

மேலும்...

சிறையிலிருந்து விடுதலையானார் சவுக்கு சங்கர்!

சென்னை(17 நவ 2022): சவுக்கு சங்கருக்கு எதிரான 4 வழக்குகளில் நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்திமன்ற நீதிபதி G.R.சுவாமிநாதன் குறித்து, அவதூறாக சமூகவலைதளத்தில் பதிவு செய்ததாக, யூட்யூபர் சவுக்கு சங்கர் மீது உயர் நீதிமன்றம் மதுரை கிளை தாமாக முன் வந்து வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் G.R.சுவாமிநாதன், B.புகழேந்தி அமர்வு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் மதுரை சிறையில்…

மேலும்...

கோவை சம்பவம் – நெல்லையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

நெல்லை (10 நவ 2022): அண்மையில் கோவையில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று தமிழகத்தில் அதிரடியாக 45 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், நெல்லை மற்றும் பாளையங்கோட்டை என இரண்டு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை டவுன் பகுதியில் இருக்கக்கூடிய சதாம் உசேன் என்பவர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இவர் தனியார் நிதி நிறுவனத்தில்…

மேலும்...

பொங்கல் பரிசு – ரொக்கமாக வழங்க தமிழக அரசு முடிவு!

சென்னை (09 நவ 2022): தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தமிழ்நாடு அரசின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. 2022ம் ஆண்டு சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்த இந்த திட்டத்தை அனைத்து நியாயவிலைக் கடைகளின் வாயிலாக, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயல்படுத்தியது. அதன்படி, 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், இதில் அதிக குளறுபடி நடந்ததாக எதிர்க்கட்சியினரும்,…

மேலும்...

தமிழக ஆளுநரை திரும்பப்பெறக் கோரி குடியரசுத் தலைவரிடம் மனு!

புதுடெல்லி (09 நவ 2022): தமிழக ஆளுநராக இருந்து வந்த பன்வாரிலால் புரோகித் மாற்றப்பட்டு, மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக மத்திய அரசு நியமித்தது. தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்ட உடனேயே திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழக ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தும்…

மேலும்...

போலி நர்ஸ் ஊசி போட்டதால் சிறுவன் பலி!

ராஜபாளையம் (09 நவ 2022): ராஜபாளையத்தில், ஆக்னெஸ்ட் கேதரின் என்ற போலி செவிலியர், தனதேவநாதன் என்ற சிறுவனுக்கு காய்ச்சலுக்கு ஊசிபோட்டதால் அச்சிறுவன் இறந்துள்ளார். 6 வயது சிறுவனான தனதேவநாதனுக்கு அலோபதி வைத்தியம் பார்த்து ஊசி போட்டதை ஒப்புக்கொண்ட ஆக்னெஸ்ட் கேதரின் வீட்டை சோதனையிட்ட போது, அலோபதி மருந்துகள், மாத்திரைகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் முருகவேல் அளித்த புகாரின் பேரில் ஆக்னெஸ்ட் கேதரின் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்...