மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் – செந்தில் பாலாஜி!

Share this News:

சென்னை (27 நவ 2022): மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஏதுவாக நாளை மறுநாள் முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மின்கட்டணம் செலுத்தும்போது ஏற்படும் சிரமங்களை தவிர்க்க, தமிழகத்தில் உள்ள அனைத்து மின் அலுவலங்களிலும் நாளை மறுநாள் முதல் டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம்களை நடத்தப்படும் என கூறியுள்ளார்.

பண்டிகை தினங்கள் தவிர்த்து, ஞாயிற்றுகிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 வரை இந்த சிறப்பு முகாம்கள் செயல்படும் எனவும்,

பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொண்டு தங்களது மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், டிசம்பர் 31ம் தேதி வரை ஏற்கனவே உள்ள நடைமுறையின்படி மின் கட்டணத்தை செலுத்தலாம் எனவும், அதற்கு எவ்வித இடையூறும் இல்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஆதார் எண் இணைப்பதால் மின் நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் மற்றும் மானியத்தில் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply