எம்பி ரவீந்திரநாத் கார் முற்றுகை – கம்பத்தில் பரபரப்பு!

கம்பம் (24 ஜன 2020): கம்பத்தில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் சென்ற கார் முற்றுகையிடப் பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கம்பத்தில் நகர அதிமுக சாா்பில் எம்.ஜி.ஆா். பிறந்தநாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு வருகை தரும் தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத்குமாா் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்ததற்காக, அவருக்கு கருப்புக் கொடி காட்டி எதிா்ப்புத் தெரிவிக்க முஸ்லிம் அமைப்புகள் திட்டமிட்டிருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால், கம்பம்- கம்பம்மெட்டு சாலை சந்திப்பு, ஏ.எம்….

மேலும்...

எட்டு வயது சிறுமி வன்புணர்ந்து கொல்லப்பட்ட வழக்கில் ஒருவன் கைது!

சிவகாசி (23 ஜன 2020): சிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளான். சிவகாசி அருகேயுள்ள கொங்கலாபுரத்தைச் சோ்ந்த சுந்தரம் – பத்மா தம்பதியினரின் மகள் பிரித்திகா. மூன்றாவது படித்து வந்த இந்த சிறுமி திங்கள்கிழமை மாலை பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தவா் அருகிலுள்ள புதர் பகுதிக்கு இயற்கை அழைப்புக்காகச் சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினா்கள் பல…

மேலும்...

துரைமுருகனுக்கு திமுக தலைவர் பதவி – ஜெயக்குமார் கேள்வி!

சென்னை (23 ஜன 2020): திமுக தலைவர் பதவியை துரைமுருகனுக்கு ஸ்டாலின் விட்டுக் கொடுப்பாரா? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அ.தி.மு.க.வில் யார் வேண்டுமானாலும் முதல்-அமைச்சர் ஆகலாம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பதிலளிக்கையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்-அமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பாரா? என்று கேட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “அதையே நான் திருப்பிக் கேட்கிறேன். அ.தி.மு.க.வில் அடிமட்ட தொண்டன் கூட கொடி கட்டிய காரில்…

மேலும்...

கொந்தளித்த அதிமுக – தடுமாறும் பாஜக!

சென்னை (23 ஜன 2020): பெரியார் குறித்த ரஜினியின் கருத்துக்கு அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அதன் கூட்டணி கட்சியான பாஜகவோ, ரஜினிக்கு ஆதரவு அளித்து வருகிறது. கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50ம் ஆண்டு நிறைவு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். அப்போது, “1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலையை, உடையில்லாமல், செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு” என்று பேசியிருந்தார். இது பெரும்…

மேலும்...

எச்.ராஜா மீது குற்றப்பத்திரிகை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை (23 ஜன 2020): உயர் நீதிமன்றத்தை அவமரியாதையாக பேசிய எச்.ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018 செப்டம்பர் 15ம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் அருகில் உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு மேடை அமைப்பது தொடர்பாக காவல்துறையினருக்கும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதத்தின்போது காவலர்கள் உயர்நீதிமன்ற ஆணையைச் சுட்டிக்காட்டி, அனுமதி மறுத்தனர். அப்போது காவல்துறையினரை மிகக் கடுமையாக…

மேலும்...

திமுகவுக்கு எச்.ராஜா மிரட்டல்

சென்னை (23 ஜன 2020): திகவுடன் உள்ள் தொடர்பை திமுக முறித்துக் கொள்ள வேண்டும் இல்லையேல் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக சிவகங்கையில் பாஜக பிரச்சாரம் மேற்கொண்டது. இதில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா “ரஜினிகாந்த் ஆதாரம் இல்லாமல் பேசவில்லை. அன்று நடந்ததைதான் பேசியுள்ளார். அவர் மீது வழக்கு தொடுத்தால் கடவுளர்களை கேவலப்படுத்திய தி.கவின் கி.வீரமணிதான் சிறைக்கு செல்ல…

மேலும்...

ஓபிஎஸ் தம்பியின் பதவி பறிப்பு – நீதிமன்றம் உத்தரவு!

தேனி (23 ஜன 2020): துணை முதல்வர் ஓபிஎஸ் தம்பியின் ஆவின் தலைவர் பதவியை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்ட ஆவினை நிர்வகிக்க, தலைவராக துணை முதல்வர் ஓபிஎஸ்.,சின் சகோதரர் ஓ.ராஜா நியமிக்கப்பட்டார். மேலும், துணை தலைவராக செல்லமுத்து மற்றும் 15 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து அம்மாவாசி என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையைல் மனு அளித்திருந்தார். அதில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி, நிர்வாகக் குழுவை தேர்வு செய்ய வேண்டும்…

மேலும்...

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் தீவிர பரிசோதனை!

சென்னை (23 ஜன 2020): கொரொனா வைரஸ் பல நாடுகளிலும் பரவி வரும் நிலையில் சென்னைக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் உடல் பரிசோதனைக்கு பின்னரே வெளியே அனுமதிக்கப் படுகின்றனர். சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரோனா என்ற வைரஸ் மனிதர்களிடையே பரவத் தொடங்கியுள்ளது. இது மிகவும் ஆபத்தான வைரஸ் என்பதால் உயிரை பறிக்கும் அபாயம் இருக்கிறது. தற்போது வரை சீனாவில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வுஹான், பெய்ஜிங், ஷாங்காய், ஹெனான், தியான்ஜின், ஜேஜியாங் ஆகிய பகுதிகளில்…

மேலும்...

பாவம் ரஜினியின் மகள்!

சென்னை (23 ஜன 2020): துக்ளக் விழாவில் ரஜினி பெரியார் குறித்து பேசி சிக்கலில் சிக்கியுள்ள நிலையில் அவரது சொந்த வாழ்க்கை குறித்தும் சமூக வலைதளங்களில் பேசி வருவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50ம் ஆண்டு நிறைவு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பெரியார் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் அது பற்றி மன்னிப்பு…

மேலும்...

ரஜினிக்கு நன்றி தெரிவித்த திமுக எம்.பி!

சென்னை (23 ஜன 2020): பெரியார் குறித்த விவகாரத்தில் திமுக எம்பி செந்தில் குமார் ரஜினிக்கு நன்றி தெரிவித்துள்ளார். கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50ம் ஆண்டு நிறைவு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பெரியார் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் அது பற்றி மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினி கூறியதால், இவ்விவகாரம் மேலும் சர்ச்சையானது. ரஜினி பேசும்போது துக்ளக்…

மேலும்...