ரஜினிக்கு நன்றி தெரிவித்த திமுக எம்.பி!

Share this News:

சென்னை (23 ஜன 2020): பெரியார் குறித்த விவகாரத்தில் திமுக எம்பி செந்தில் குமார் ரஜினிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50ம் ஆண்டு நிறைவு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பெரியார் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் அது பற்றி மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினி கூறியதால், இவ்விவகாரம் மேலும் சர்ச்சையானது.

ரஜினி பேசும்போது துக்ளக் மட்டுமே இதனை வெளியிட்டது என்றார். ஆனால் செய்தியாளர்கள் சந்திப்பில் அவுட்லுக் பத்திரிகையை ஆதாரமாக காட்டினார் இது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியதோடு, ரஜினி மேலும் விமர்சனத்திற்கு உள்ளானார்.

இந்நிலையில் ரஜினிக்கு திமுகவின் தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி எம்பி செந்தில் குமார் நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “தமிழகத்தில் #பெரியாரை உயிர் துடிப்புடன் வைத்திருக்க உதவிய திராவிடர் ரஜினி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.” என்று தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply