ஜெயலலிதா மரணம் தொடர்பாக மீண்டும் தொடங்கும் விசாரணை!

சென்னை (02 மார்ச் 2022): ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் தொடங்குகிறது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்திற்கான கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுவரும் நிலையில், வரும் 7ஆம் தேதி முதல் குறுக்கு விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் தொடங்குகிறது. ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் 10 பேருக்கு…

மேலும்...

கார்கிவ் போலீஸ் தலைமையகம் மீது ரஷ்யா தாக்குதல்!

கார்கிவ் (02 மார்ச் 2022): உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவ் நகரில் உள்ள பல அடுக்கு மாடிகளைக் கொண்ட போலீஸ் தலைமையகத்தை ரஷ்யப் படையினர் ஏவுகணை மூலம் தாக்கி அழித்தனர். இதனால் மொத்தக் கட்டிடமும் பெரும் சேதமடைந்து, பல மாடிகள் நொறுங்கி, தீப்பிடித்து எரிந்து வருகிறது. கீவ் நகருக்கு அடுத்த பெரிய நகரம் கார்கிவ். இங்குதான் தற்போது ரஷ்யப் படைகள் கடுமையாக தாக்கி வருகின்றன. இந்நகரை விட்டு பல ஆயிரம் பேர் ஏற்கனவே வெளியேறி விட்டனர்….

மேலும்...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நாளை பதவியேற்பு!

சென்னை (01 மார்ச் 2022): தமிழகம் முழுவதும் கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. பிப்ரவரி 22ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், திமுக கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் நாளை பதவியேற்க உள்ளனர். நாளை காலை 9.30மணி முதல் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்கின்றனர். சேர்மன், துணை சேர்மன், மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல்…

மேலும்...

எடப்பாடி பழனிச்சாமி மீது ஓ.பி.எஸ் பாய்ச்சல்!

சென்னை (28 பிப் 2022): என்னை கேட்காமல் எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா பிறந்த நாளின் போது, சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கடந்த 24-ந் தேதி சந்தித்துப் பேசினார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த சந்திப்பிற்கு ஓ.பி.எஸ்சை அழைத்துச் செல்லவில்லை. ஓ.பி.எஸ்சிடம் சொல்ல கூட இல்லை எடப்பாடி. இத்தனைக்கும், ஓ.பி.எஸ். கேட்டும் ஜெயக்குமாரைச் சந்திக்க செல்வது பற்றி மூச்சு விடவில்லை இ.பி.எஸ். இந்த நிலையில், ஜெயக்குமார் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும்…

மேலும்...

நாகூர் தர்காவை கையகப்படுத்தியது தமிழக அரசு!

நாகப்பட்டினம் (27 பிப் 2022): நாகூர் தர்காவை தமிழக அரசு கையகப்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம், நாகூர் ஆண்டவர் தர்ஹா இதுவரை பரம்பரை அறங்காவலர்கள் 8 பேரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பரம்பரை அறங்காவலர்களில் ஒருவர் இறந்தார். இதனை அடுத்து தர்காவை நிர்வாகம் செய்வதில் அறங்காவலர்களுக்குள் போட்டி ஏற்பட்டது. இந்த முரண்பாடு காரணமாக நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2017 முதல் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலாவுதீன், ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் ஆகியோர் இடைக்கால நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர். 4…

மேலும்...

தெலுங்கானாவில் ஏற்பட்ட விமான விபத்தில் தமிழக பெண் விமானி பலி!

குண்டூர் (26 பிப் 2022): தெலுங்கானாவில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் பெண் விமானி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவின் குண்டூர் பகுதியிலிருந்து தெலுங்கானாவின் நல்கொண்டா பகுதிக்கு சென்றுகொண்டிருந்த பயிற்சி விமானம் ஒன்று எதிர்பாராத விதமாக தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் விமானி மகிமா உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும்...

உணவு, குடிநீர் கிடைக்கவில்லை – உக்ரைனிலிருந்து வந்த தமிழக மாணவர் தகவல்!

தேனி (26 பிப் 2022): உக்ரைனில் மாணவர்களுக்கு குடிநீரோ உணவோ கிடைப்பது இல்லை என்று உக்ரைனிலிருந்து தமிழகம் வந்துள்ள தேனீ மாணவர் தெரிவித்துள்ளார். உக்ரைனைக் கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய ராணுவ வீரர்கள் போர் தொடுத்து வருகின்றனர். பதற்றமான சூழலுக்கு நடவே தமிழகத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் மாணவர்கள் அங்கு சிக்கியுள்ளனர். இந்நிலையில் போர் துவங்குவதற்கு சற்று முன்பு உக்ரைனிலிருந்து தமிழகம் வந்துள்ள தேனி மாணவர் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள தகவலில் “உக்ரைன் கீவ் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில்…

மேலும்...

அண்ணாமலைக்கு எந்த தகுதியும் கிடையாது – கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை (23 பிப் 2022): தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது என்று அண்ணாமலை கூறுவதற்கு எந்தத் தகுதியும் கிடையாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது. கடந்த மக்களவை, சட்டமன்றம், ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் எத்தகைய பெருவெற்றியைத் தமிழக மக்கள் வழங்கினார்களோ, அதைவிடக் கூடுதலாக…

மேலும்...

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது!

சென்னை (23 பிப் 2022): அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது வண்ணாரப்பேட்டை 49 ஆவது வார்டில் கள்ள ஓட்டு போட முயற்சித்ததாகக் கூறி திமுக பிரமுகர் ஒருவரை தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்து வந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது….

மேலும்...

விசிகவை தோற்கடிக்க உதவியதா திமுக?

தாம்பரம் (23 பிப் 2022): தாம்பரம் பகுதியில் கூட்டணி கட்சி விசிக வேட்பாளரை தோற்கடிக்க சுயேட்சைக்கு திமுக எம்.எல்.ஏ உதவியதாக சர்ச்சை எழுந்துள்ளது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தாம்பரம் மாநகராட்சி 52வது வார்டு கூட்டணிக் கட்சியான விசிகவிற்கு ஒதுக்கப்பட்டது. அந்த வார்டில் திமுகவில் சீட் எதிர்பார்த்திருந்த பெரியநாயகம் திமுகவிலிருந்து விலகி சுயேச்சையாக நின்றார். இவர், தான் வாக்குகோரும் பிரசுரங்களில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியில் நம் பகுதி மக்களுக்காக என்றென்றும் உழைத்திட ஆதரவு தர…

மேலும்...