குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து – மேலும் 6 ராணுவ வீரர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன!

ஊட்டி (11 டிச 2021): குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான மேலும் 6 ராணுவ வீரர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 8-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் பிரிகேடியர் லக்பிந்தர் சிங் லிட்டர் ஆகிய…

மேலும்...

யூடூபர் மாரிதாஸ் கைதுக்கு சீமான் கடும் கண்டனம்!

சென்னை (10 டிச 2021): யூடூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதை தமிழகம் மொத்தமும் ஆதரித்து வரும் நிலையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாரிதாஸ் கைதை கடுமையாக எதிர்த்துள்ளார். இதுகுறித்து சீமான் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: முப்படைகளின் தலைமை தளபதியின் ஹெலிகாப்டர் விபத்திற்கு தமிழகத்தை காஷ்மீருடன் இணைத்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக பாஜக ஆதரவு யூடியூபர் மாரிதாஸ் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது, கைது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை…

மேலும்...

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உட்பட 13 பேர் பலி என அறிவிப்பு!

குன்னூர் (08 டிச 2021): முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப் படை அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது. கோவை சூலூரிலிருந்து குன்னூர் ராணுவ பயிற்சி பள்ளிக்கு இந்திய விமானப்படைக்கு சொந்தமான MI-17V5 ரக ஹெலிகாப்டர் சென்றபோது குன்னூர் அருகே காட்டேரி பார்க், நஞ்சப்பா சத்திரம் பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் , அவரது மனைவி உள்பட…

மேலும்...

குன்னூரில் பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து – 7 க்கும் மேற்பட்டோர் பலி!

குன்னூர் (08 டிச 2021): குன்னூரில் இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 7 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், குன்னூர், வெலிங்கடனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு இன்று நடக்க இருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து,…

மேலும்...

ரஜினியை சந்தித்த சசிகலா – காரணம் இதுதான்!

சென்னை (08 டிச 2021): நடிகர் ரஜினியை வி.கே.சசிகலா சந்தித்துப் பேசியுள்ளார். நேற்று மாலை ரஜினி வீட்டுக்குச் சென்று பார்த்தார் சசிகலா. தாதா சாகிப் பால்கே விருது பெற்ற சூப்பர் ஸ்டாருக்கு சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார் என்று சசிகலா அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலாவை ரஜினி மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் வரவேற்றனர். சசிகலா வருகையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஓய்வில் இருந்த ரஜினிகாந்த் அடுத்த…

மேலும்...

மழை விட்டும் தூரல் விடாத கதைதான் தக்காளியின் விலை!

சென்னை (08 டிச 2021): சென்னையில் இன்றைய நிலவரப்படி தக்காளி 130 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகம் தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்தது. அதேபோல் வடகிழக்குப் பருவமழை காரணமாக கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்தது. மேலும், மழை காரணமாக தக்காளிச் செடிகள் அழுகியதால் தக்காளி சாகுபடி குறைந்தது. ஆகவே, தக்காளி…

மேலும்...

வீட்டில் பிரசவம் – குழந்தை மரணம்!

கோவை (07 டிச 2021): வீட்டில் சுயமாக பிரசவம் பார்த்த நிலையில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. கோவை செட்டிவீதியில் உள்ள உப்புக்கார வீதியை சேர்ந்தவர் விஜயகுமார், நகை பட்டறை தொழிலாளி. இவருடைய மனைவி புண்ணியவதி. விஜயகுமார் – புண்ணியவதி தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் உள்ளன. இந் த நிலையில் 4-வது முறையாக கர்ப்பமானதால் பிரசவம் தொடர்பாக அலட்சியப் போக்கே இருந்து வந்துள்ளது. புண்ணியவதியும் மனவருத்தத்துடன் இருந்ததாக தெரிகிறது. நிறைமாத கர்ப்பிணியான அவர், பிரசவ வலி எடுத்ததும் மருத்துவமனைக்குச்…

மேலும்...

சசிகலா எச்சரிக்கை!

சென்னை (05 டிச 2021): அதிமுக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்துவதை இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொண்டர்களுக்கான ஒரு இயக்கமாகவும் ஏழை எளிய மக்களுக்கான ஒரு இயக்கமாகவும் இரும்பெரும் தலைவர்களின் தலைமையில் செயல்பட்டு வந்தது. நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் பார்த்து பொறாமைபடும் அளவுக்கு ஒளிர்ந்த நம் இயக்கத்தின் இன்றைய நிகழ்வுகளைப் பார்க்கும்போது ஒவ்வொரு தொண்டனும்…

மேலும்...

சவூதியில் நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து இந்தியர்கள் மரணம்!

ரியாத் (04 டிச 2021): சவூதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த முஹம்மது ஜாபிர் என்பவர் அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் ஜுபைல் நகரிலிருந்து ரியாத்திற்கு வந்து கொண்டிருந்தபோது ரியத்திலிருந்து 198 கி.மீ தூரத்தில் உள்ள அல்ரைன் என்ற பகுதியில் விபத்து நடந்துள்ளது. . ஜாபிர் குடும்பத்தினருடன் பயணித்த வாகனம் அல் ரெய்ன் என்ற இடத்தில் மற்றொரு…

மேலும்...

இந்தியாவில் இருவருக்கு ஒமிக்றான் தொற்று!

பெங்களூரு (02 டிச2021): இந்தியாவில் இருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனாவைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் தற்போது ஒமிக்ரான் என்ற சொல்லைக் கேட்டாலே அச்சமடைந்து வருகின்றன. தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை மற்றும் வீரியமிக்க வைரசுக்கு ஒமிக்ரான் என்று விஞ்ஞானிகள் பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில் கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இருவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேவேளை மக்கள்…

மேலும்...